search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்களம்"

    • "செங்களம்" இணையத் தொடர் கடந்த மார்ச் 24ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
    • இந்த இணையத் தொடர் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இணையத் தொடர் செங்களம். இதில் கலையரசன், வாணி போஜன், வேல ராமமூர்த்தி, பகவதி பெருமாள், பிரேம், டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை அபி மற்றும் அபி என்டர்டெயின்மென்ட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரித்துள்ளார்.


    செங்களம்

    செங்களம்

    இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் சூர்யகலாவாக வாணி போஜனும், ராயராக கலையரசனும், கணேஷமூர்த்தி எம்எல்ஏ-வாக வேல ராமமூர்த்தியும், ராஜமாணிக்கமாக பிரேமும், வீராவாக டேனியலும் நடித்துள்ளனர்.


    செங்களம்

    செங்களம்

    "செங்களம்" இணையத் தொடர் கடந்த மார்ச் 24ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இந்த செங்களம் தொடர் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இணையத்தொடரை பார்த்த பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

    • ஜீ5 வழங்கும் "செங்களம்" இணையத் தொடர் மார்ச் 24ம் தேதி அன்று வெளியாகவுள்ளது.
    • "செங்களம்" இணையத் தொடரின் டிரைலர் வெளியீட்டு விழாவில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள செங்களம். இதனை அபி மற்றும் அபி என்டர்டெயின்மென்ட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரித்துள்ளார். இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இத்தொடரின்  டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.




    இந்நிகழ்வினில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குனர் அமீர் பேசியதாவது, இந்த படைப்பில் வேலை பார்த்துள்ள பலரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள், எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளார்கள். இந்த டிரைலர் பார்த்த போது, இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று எனக்குப் பொறாமை ஏற்பட்டது. 




    ஒரு கலைஞனுக்கு மற்றொரு கலைஞனின் படைப்பைப் பார்த்து இப்படி பொறாமை ஏற்பட்டாலே,  அது நல்ல படைப்பாகத் தான் இருக்கும். அந்த வகையில் எஸ் ஆர் பிரபாகரன் இப்போதே ஜெயித்து விட்டார். இந்த டிரைலரில் முதலில் என்னைக் கவர்ந்தது இசை தான் மிகச்சிறந்த இசை. காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர். ஜீ5 தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தந்து வருகிறார்கள் அவர்களுக்கு இந்த செங்களம் தொடரும் வெற்றிப்படைப்பாக அமையும். அனைவருக்கும் நன்றி.


    "செங்களம்" இணையத் தொடர் மார்ச் 24ம் தேதியன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×