search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலக்ட்ரிக் ஸ்கூட்டர்"

    • ஓலா எலக்ட்ரிக்கிற்கு எதிராக நான் விழிப்புணர்வை பரப்புவேன்.
    • "விரக்தியடைந்த ஓலா வாடிக்கையாளர்" என்று பிளக்ஸ் கார்டில் கையெழுத்திட்டு உள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த நிஷா என்பவர், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணத்தின்போது பலமுறை பழுதடைந்ததால், இதனை வாங்க வேண்டாம் என்று மற்றவர்களை எச்சரித்துள்ளார்.

    நிஷா சி சேகர் என்ற அந்த வாடிக்கையாளர், கஸ்டமர் கேர் (customer care) மென்பொருளை புதுப்பித்ததாகவும், ஆனால் சிக்கல் நீடித்ததாகவும் கூறி உள்ளார்.

    ஸ்கூட்டரை பெற கிட்டத்தட்ட ஒரு மாதம் காத்திருக்க வேண்டியிருந்தது என்றும், முழுத் தொகையையும் ரொக்கமாகச் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

    ஓலா எலக்ட்ரிக்கிற்கு எதிராக நான் விழிப்புணர்வை பரப்புவேன் என்று தெரிவித்துள்ள அவர் தனது எக்ஸ் பதிவில், தனது ஸ்கூட்டரின் படத்தை பகிர்ந்துள்ளார். அதில்,

    அன்புள்ள கன்னடர்களே, ஓலா ஒரு பயனற்ற இருசக்கர வாகனம். நீங்கள் ஒன்றை வாங்கினால், அது உங்கள் வாழ்க்கையை கடினமாக்கும். தயவுசெய்து ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்காதீர்கள்.

    "விரக்தியடைந்த ஓலா வாடிக்கையாளர்" என்று பிளக்ஸ் கார்டில் கையெழுத்திட்டு உள்ளார். தனது ஸ்கூட்டரில் பிளக்ஸ் கார்டைத் தொங்கவிட்டு, அதைப் பார்க்கும் அனைவருக்கும் வாகனத்தை பற்றிய உண்மை சரிபார்ப்பை கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு, அதை வாங்குவதை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்.

    • ஒகாயா எல்க்ட்ரிக் நிறுவன மாடல்களுக்கு விலை குறைப்பு வழங்கப்படுகிறது.
    • இம்மாத இறுதி வரை ஒகாயா ஸ்கூட்டர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது.

    ஒகாயா எலக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை புதிய ஒகாயா ஸ்கூட்டர்களை வாங்குவோருக்கு ரூ. 31 ஆயிரம் வரையிலான பலன்களை வழங்குகிறது.

    இத்துடன் புதிய ஒகாயா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயனர்கள் ரூ. 1 மட்டும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். விலை குறைப்பு மற்றும் நிதி சலுகைகள் ஆகஸ்ட் மாத இறுதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும் என்று ஒகாயா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஒகாயா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் புதிய விலை அதன் ஃப்ரீடம் மாடலுக்கு ரூ. 74 ஆயிரத்து 899 என துவங்கி டாப் எண்ட் மோட்டோஃபாஸ்ட் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம் என மாற்றப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    தற்போது ஒகாயா நிறுவனம் இந்த மாடல்களை மாத தவணையில் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்குகிறது. அதன்படி மாத தவணைக்கான வட்டி 6.99 சதவீதம் என்றும் மாத தவணை கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது.

     


    புதிய விலை விவரங்கள்:

    ஒகாயா மோட்டோபாஸ்ட் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம் என மாறி இருக்கிறது.

    ஒகாயா பாஸ்ட் எப்3 விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சத்து 09 ஆயிரம் என மாறி இருக்கிறது.

    ஒகாயா பாஸ்ட் எப்4 விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சத்து 19 ஆயிரம் என மாறி இருக்கிறது.

    ஒகாயா பாஸ்ட் எப்2பி விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்தில் இருந்து ரூ. 94 ஆயிரத்து 998 என மாறி இருக்கிறது.

    ஒகாயா பாஸ்ட் எப்2டி விலை ரூ. 1 லட்சத்து 05 ஆயிரத்தில் இருந்து ரூ. 94 ஆயிரத்து 998 என மாறி இருக்கிறது.

    ஒகாயா பாஸ்ட் எப்2எப் விலை ரூ. 98 ஆயிரத்து 802-இல் இருந்து ரூ. 83 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.

    ஒகாயா பிரீடம் விலை ரூ. 78 ஆயிரத்து 557-இல் இருந்து ரூ. 74 ஆயிரத்து 899 என மாறி இருக்கிறது.

    • எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எரிந்த தீ அங்கு இருந்த பார்சல்கள், மற்றும் கவர்கள் மீதும் பற்றி எரிந்தது.
    • சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு எஸ்.கே.சி. ரோட்டில் ஒரு வணிக வளாகம் உள்ளது. இங்கு சிவப்பிரகாசம் என்பவர் கூரியர் அலுவலகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜர் போட்டு இருந்தார். அப்போது திடீரென ஸ்கூட்டர் வெடித்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென எரிய தொடங்கியது.

    எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எரிந்த தீ அங்கு இருந்த பார்சல்கள், மற்றும் கவர்கள் மீதும் பற்றி எரிந்தது. பின்னர் இதுகுறித்து உடனடியாக ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் அதற்குள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பார்சல்கள் மற்றும் வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த 12 மின் மோட்டார்களும் தீயில் கருகியது. பின்னர் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்தால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    • எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து ஏற்பட்டு அங்கு தகரத்தால் வேயப்பட்ட மாட்டு கொட்டகையில் தீ பரவியது
    • தீ விபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மாட்டு கொட்டகை தீயில் எரிந்து சேதமானது

    சென்னிமலையை அடுத்த வெள்ளோடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட அனுமன்பள்ளி கொளத்தூர் பகுதியில் சம்பவத்தன்று மாலையில் கவுரி என்பவர் தன்னுடைய மாட்டு கொட்டகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுத்தி இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து ஏற்பட்டு அங்கு தகரத்தால் வேயப்பட்ட மாட்டு கொட்டகையில் தீ பரவியது. பின்னர் இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மாட்டு கொட்டகை தீயில் எரிந்து சேதமானது.

    மின் கசிவு காரணமாக ஸ்கூ ட்டரில் தீ விபத்து ஏற்ப ட்டதா? என்பது குறித்து வெள்ளோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×