என் மலர்
தமிழ்நாடு
ஈரோட்டில் சார்ஜர் போட்ட போது தீ பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
- எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எரிந்த தீ அங்கு இருந்த பார்சல்கள், மற்றும் கவர்கள் மீதும் பற்றி எரிந்தது.
- சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு எஸ்.கே.சி. ரோட்டில் ஒரு வணிக வளாகம் உள்ளது. இங்கு சிவப்பிரகாசம் என்பவர் கூரியர் அலுவலகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜர் போட்டு இருந்தார். அப்போது திடீரென ஸ்கூட்டர் வெடித்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென எரிய தொடங்கியது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எரிந்த தீ அங்கு இருந்த பார்சல்கள், மற்றும் கவர்கள் மீதும் பற்றி எரிந்தது. பின்னர் இதுகுறித்து உடனடியாக ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பார்சல்கள் மற்றும் வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த 12 மின் மோட்டார்களும் தீயில் கருகியது. பின்னர் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்தால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.