என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைவர் 170"

    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது.

    இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வந்த நடிகர் ரஜினிகாந்த், அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளார். கடந்த 3 நாட்களாக படப்படிப்புக்காக காரில் பணகுடிக்கு வரும் நடிகர் ரஜினியை காண அவரது ரசிகர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களிடையே கை அசைத்தபடியும், கை குலுக்கியபடியும் நடிகர் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.


    இந்நிலையில் இன்று 4-வது நாள் படப்படிப்பு நடக்கிறது. 3 நாட்கள் மட்டுமே அங்குள்ள தள ஓடு தொழிற்சாலையில் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், கூடுதல் காட்சிகளுக்காக இன்று மேலும் ஒருநாள் படப்பிடிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே படப்பிடிப்பில் பங்கேற்க வந்த நடிகர் ரஜினிக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் ரசிகர்கள் மத்தியில் பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினிகாந்த், "46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லைக்கு வருகை தந்துள்ளேன். கடைசியாக 1977-ம் ஆண்டு புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்துக்கு வந்தது" என அவர் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

    இந்த படத்தில் நடிகர் அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்கின்றனர். ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

    • நடிகர் ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஜெயிலர் பட வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ள இப்படத்திற்கு 'தலைவர் 170' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

    பின்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் 3 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். நேற்று மாலை குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.


    ரஜினியுடன் செல்பி எடுத்த ரசிகர்கள்

    அந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அவர் வருவதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். ரசிகர்களை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் கையசைத்தார். அப்போது அவருடன் சில ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    படப்பிடிப்பை முடித்த பிறகு ரஜினிகாந்த் மீண்டும் கன்னியாகுமரியில் உள்ள விடுதிக்கு சென்றார். குமரி மாவட்டத்தில் சினிமா படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கன்னியாகுமரியில் இருந்து இன்று சென்னைக்கு புறப்பட்டார். அவர் கார் மூலம் ஓட்டலில் இருந்து வெளியே வந்தார்.

    அப்போது ஓட்டலின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் காரில் இருந்த ரஜினிகாந்துடன் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்பு நடிகர் ரஜினிகாந்த் காரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் ரஜினியின் 170-வது படத்தை ஞானவேல் இயக்குகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் நெல்லை பகுதியில் நடைபெற்றது.


    இந்நிலையில் 'தலைவர் 170' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது என்றும் இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் நாளை மும்பை செல்லவுள்ளதாகவும் அங்கு ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • நடிகர் ரஜினிகாந்த்-இன் 170-வது படத்தை ஞானவேல் இயக்குகிறார்.
    • இந்த படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.

    நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டி.ஜே. ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் நெல்லை பகுதியில் நடைபெற்ற நிலையில், தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 33 ஆண்டுகள் கழித்து தனது வழிகாட்டியுடன் நடிப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

    அந்த பதிவில், "33 ஆண்டுகளுக்கு பிறகு, எனது வழிகாட்டி ஸ்ரீ அமிதாப் பச்சனுடன், லைக்கா தயாரிப்பில் டி.ஜே. ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தின் மூலம் மீண்டும் பணியாற்றுகிறேன். எனது மனம் முழுக்க சந்தோஷத்தால் நிரம்பி வழிகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது.


    இந்நிலையில் 'தலைவர் 170' படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினி மற்றும் அமிதாப்பின் புகைப்படத்தை பகிர்ந்து மும்பை படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    • கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
    • ரஜினியின் புதிய படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குகிறார்.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அருகில் இருக்கும் மற்றொரு அரங்கில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பும் அங்கு நடைபெறுகிறது.


    கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரஜினிகாந்த், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கமல்ஹாசனை சந்திக்க வருவதாக தெரிவித்துள்ளார். இதனையறிந்த கமல்ஹாசன் "என் நண்பனைச் சந்திக்க நானே வருகிறேன்" என காலை 8 மணிக்கே உடனடியாக தலைவர் 170 ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்து ரஜினிகாந்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். கமல்ஹாசனை கண்ட ரஜினிகாந்த் மகிழ்ச்சியில், அவரை கட்டித்தழுவிக் கொண்டார். இருவரும் தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.


    இந்தியத் திரையுலகின் மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் இந்த நட்பும், அவர்களுக்கிடையேயான அன்பும், படப்பிடிப்பில் இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக பாபா, பஞ்சதந்திரம் படங்களின் ஷுட்டிங் இதே இடத்தில் நடைபெற்ற போது இருவரும் சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர்.

    ×