என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஷ்வர்யா லட்சுமி"

    • மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'பொன்னியின் செல்வன் -2'.
    • இப்படத்தில் இடம்பெற்ற ஐஷ்வர்யா லட்சுமியின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


    பூங்குழலி - ஐஷ்வர்யா லட்சுமி

    பூங்குழலி - ஐஷ்வர்யா லட்சுமி

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்த ஐஷ்வர்யா லட்சுமியின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சமீபத்தில் நடித்து வெளியான 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான ’கண்ட 'கண்ட நாள் முதல்’ படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார்

    விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அசோக் செல்வன். அதற்கடுத்து 2014 ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்தின் மூலம் கதாநாயகானார்.

    தொடர்ந்து நல்ல கதைகளையும் , நல்ல கதாப்பாத்திரத்தையும் தேடி தேடி நடித்து வருகிறார் அசோக் செல்வன். ஓ மை கடவுளே , சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், சபா நாயகன் மற்றும் ப்ளூ ஸ்டார் போன்ற பல ஹிட்டான படங்களில் நடித்தார்.

    அவர் சமீபத்தில் நடித்து வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக 'பொன் ஒன்று கண்டேன்' படத்தில் நடித்துள்ளார். அசோக் செல்வனுடன் ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார்.

    ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடாமல் நேராக ஜியோ சினிமாவில் வெளியிடுகிறார்கள் மக்கள் அனைவரும் இலவசமாக ஜியோ சினிமா செயலி மூலம் இப்படத்தை காணலாம்.

    தற்பொழுது படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த வெப் தொடருக்கு `தீவினை போற்று’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து இருந்தாலும் தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    அந்த வகையில் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

    மேலும் இவர் தெலுங்கிலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆப் கொத்தா திரைப்படத்திலும், அசோக்செல்வன் நடிப்பில் வெளியான பொன் ஒன்று கண்டேன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

    அடுத்ததாக இவர் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    அதே சமயம் ஐஸ்வர்யா லட்சுமி புதிய வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குனர் மோசு என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றியாவார்.

    இந்த வெப் தொடருக்கு `தீவினை போற்று' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடரின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு 40 நாட்களாக படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது. தற்பொழுது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் பொள்ளாச்சியில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடர் 1990-களில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது.  இதனை யாழி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்தொடரில் ஐஷ்வர்யா லட்சுமியுடன் இணைந்து சத்யராஜ், பாரதிராஜா மற்றும் பாபு ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    'தீவினை போற்று' வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.
    • இப்படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்கியுள்ளார்.

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் புங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார் நடிகை ஐஷ்வர்யா லட்சுமி. அதைத்தொடர்ந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

    இவர் தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் ஹலோ மம்மி. இப்படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்கியுள்ளார். படத்தின் கதையை மலையாள திரைப்படமான ஃபலிமி புகழ் சஞ்சோ ஜோசஃப் எழுதியுள்ளார்.

    இப்படத்தில் ஷரஃப் உ தீன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஒரு காமெடி கலந்த ஃபேண்டசி திரைப்படமாக உருவாகியுள்ளது. இவர்களுடன் இப்படத்தில் அஜு வர்கீஸ், ஜெகதீஷ், ஜானி ஆண்டனி, பிந்து பேனிக்கர், சன்னி இந்துஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் ஒளிப்பதிவை பிரவீன் குமார் மேற்கொண்டுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை ஹேங்க் ஓவர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டாரை படக்குழு வெளியிட்டது. படத்தை குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.
    • இவர் தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் ஹலோ மம்மி.

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார் நடிகை ஐஷ்வர்யா லட்சுமி. அதைத்தொடர்ந்து தமிழில் கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

    இவர் தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் ஹலோ மம்மி. இப்படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்கியுள்ளார். படத்தின் கதையை மலையாள திரைப்படமான ஃபலிமி புகழ் சஞ்சோ ஜோசஃப் எழுதியுள்ளார்.

    இப்படத்தில் ஷரஃப் உ தீன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஒரு காமெடி கலந்த ஃபேண்டசி திரைப்படமாக உருவாகியுள்ளது. இவர்களுடன் இப்படத்தில் அஜு வர்கீஸ், ஜெகதீஷ், ஜானி ஆண்டனி, பிந்து பேனிக்கர், சன்னி இந்துஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் ஒளிப்பதிவை பிரவீன் குமார் மேற்கொண்டுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை ஹேங்க் ஓவர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. தற்பொழுது படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தற்பொழுது மலையாளத்தில் ஹலோ மம்மி என்ற திரைப்படத்தின் நடித்துள்ளார்.
    • பொன்னியின் செல்வன் படத்தில் அவரது பூங்குழலி கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    விஷாலுடன் ஆக்சன் மற்றும் ஜகமே தந்திரம், கட்டாகுஸ்தி ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. பொன்னியின் செல்வன் படத்தில் அவரது பூங்குழலி கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    தற்பொழுது மலையாளத்தில் ஹலோ மம்மி என்ற திரைப்படத்தின் நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

    தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தாயார் விருப்பத்திற்கிணங்க இணைய தளம் ஒன்றில் எனது சுய விபரங்களை பதிவிட்டேன். சிறு வயதில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது. பல்வேறு சூழ்நிலைகளை பார்த்தும், பலரது திருமண வாழ்க்கையையும் பார்க்கும் போது எனக்கு திருமணம் செய்யும் ஆசையே வெறுத்து விட்டது. மகிழ்ச்சியே இல்லாத பலரின் திருமண வாழ்க்கையின் முடிவை பார்த்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். இதற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளும் திட்டமே இல்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×