என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருண் குமார்"

    • விளம்ரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.
    • வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இயக்குநர் அருண் குமார் மற்றும் நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விக்ரம் வீர தீர சூரன் படத்தை விளம்ரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

    தமிழ்நாடு முழுக்க பல்வேறு திரையரங்குகளுக்கு சென்ற நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறார். அந்த வரிசையில், தற்போது நடிகர் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் திண்டுக்கல் மாவட்டம் சாணர்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை நேரில் கண்டு ரசித்தனர்.

    வீர தீர சூரன் படத்தை விளம்பரப்படுத்தும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ரசிகர்கள் விக்ரம் மற்றும் துஷாரா விஜயனை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

    • இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் படம் ‘சித்தா’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது 'சித்தா' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கிறார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைக்கிறார்.


    சித்தா முதல் தோற்ற போஸ்டர்

    ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

    இதையடுத்து சித்தார்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

    • அருண்குமார் 'சித்தா' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் 'சித்தா' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ளார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.


    ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவான இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'சித்தா' திரைப்படத்தை பாராட்டி நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சித்தா மிகவும் உணர்திறன் மிக்க விஷயம், மிக இலகுவான முறையில் மிகவும் தெளிவுடன் கையாளப்பட்டுள்ளது. இயக்குனர் அருண் குமாருக்கு வாழ்த்துகள். சித்தார்த் இந்த திரைக்கதையை தேர்ந்தெடுத்து தயாரித்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விக்ரம் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார்.

    தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதைத்தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    விக்ரம் 62 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விக்ரமின் 62-வது படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


    • 'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன்
    • இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 62' எனும் திரைப்படத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.

    'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் 'ராயன்' , 'வேட்டையன்' ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தற்போது 'சீயான்' விக்ரம் நடிப்பில் தயாராகும் 'சீயான் 62' படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 62' எனும் திரைப்படத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் லேட்டஸ்டாக நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் திறமையான முன்னணி கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் 'சீயான் 62' படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

    இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×