search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதம் பாவா"

    • விமல் நடிப்பில் இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “குலசாமி”.
    • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    நடிகர் விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குலசாமி. இப்படத்திற்கு விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார். மிக் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசியதாவது, இந்த படத்தின் இயக்குனர் சரவணனை உங்களுக்கு நடிகராக தெரியும் ஆனால் அவர் நடிக்க வருவதற்கு முன்னர் இரண்டு படங்களை இயக்கும்போதே அவருடன் நான் பணி புரிந்துள்ளேன் அதை பற்றி சில விஷயங்களை மட்டும் கூறிக் கொள்கிறேன். சுரேஷ் காமாட்சியும் இயக்குனரும் பழைய ஆட்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் தண்டாயுதபாணி என்ற படத்தை இயக்கி கொண்டிருந்தார். அது அவரது முதல் படம் எனக்கு உதவி இயக்குனராக முதல் படம் , சூட்டிங் துவங்குவதற்கு முதல் நாள் படத்தின் கதாநாயகர் அதிக சம்பளம் கேட்கிறார் என்று மாற்றுகின்றனர்.



    அதன்பின் கதாநாயகர் யார் என்று கேட்டால் தயாரிப்பாளரின் தம்பி மகன் என்று சொல்லுகின்றனர். நான் இதற்கு ஒத்துப் போகவில்லை பத்து வருடம் ஆனாலும் பரவாயில்லை நாம் வேறு படம் பண்ணிக்கொள்ளலாம் என்று கூறினேன், அதற்கு சரவணன் இந்த படமே எனக்கு பதினைந்து வருடம் கழித்து தான் கிடைத்திருக்கிறது என்று கூறினார். அதன்பிறகு நான் அந்த கதாநாயகருடன் பேசினேன் அவர் 3 லட்சதிலிருந்து 1 1/2 லட்சமாக குறைத்துக் கொண்டார். அந்த கதாநாயகர் வேறு யாருமில்லை நம் ஆர்யா தான். ஒரு வழியாக பேசி கஷ்ட பட்டு படத்தை முடித்து விட்டோம்.

    படம் வெளியான பின்னர் தினத்தந்தியில் ஒரு விமர்சனம் வருகிறது. "சக்தி சரவணன் கமர்சியல் இயக்குனர்களில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வருவார்" என்று அதை பல முறை சொல்லி கிண்டலடித்திருக்கிறேன். அதன் பிறகு ஒரு அரசியல் கட்சி நடத்தும் ஒருவரை வைத்து படம் இயக்கினார். அதில் கட்சிக்கு தலைவரை பார்க்க வருபவர்களை எல்லாம் நடிக்க வைத்து படத்தை எடுத்தார். இது போல பல சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்துள்ளது. இந்த குலசாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்ததும் அவருக்கு போன் செய்து வாழ்த்துகள் கூறினேன் உங்களுக்கேற்ற கதையை பிடிதுள்ளீர்கள் கண்டிப்பாக வெற்றிதான் வாழ்த்துகள் என்றேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், இன்னும் பல படங்கள் இயக்க வேண்டும், நன்றி என்றார்.

    குலசாமி திரைப்படம் வருகிற ஏப்ரல் 21 ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×