search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக பாஜக கூட்டணி"

    • தேர்தல் வரும்போதுதான் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும். கூட்டணி இப்போதைக்கு இல்லை என்றார்.
    • ஜெயக்குமாரின் கருத்துக்கு பாஜக மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் பதிலளித்துள்ளார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது, "கூட்டணி தர்மத்தை மீறி பேசும் எந்தவொரு கருத்தையும் தன்மானம் உள்ள அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    பா.ஜனதா தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறார்கள். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. அண்ணாமலைக்கு காலே கிடையாது.

    பா.ஜனதா இங்கே கால் ஊன்றவே முடியாது. அப்படிபட்ட நிலைமை. உங்களது வாக்கு வங்கிகள் எங்களுக்குத் தெரியும். எங்களை வைத்துதான் உங்களுக்கு அடையாளம்.

    தேர்தல் வரும்போதுதான் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும். கூட்டணி இப்போதைக்கு இல்லை. இதுதான் எங்கள் நிலைப்பாடு. இது தனிப்பட்ட முடிவு அல்ல. கட்சியின் முடிவைதான் தெரிவிப்பேன்"என்று கூறினார்.

    ஜெயக்குமாரின் இந்த கருத்துக்கு பாஜக மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் பதிலளித்துள்ளார்.

    இந்நிலையில், "தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது என்றும் கூட்டணி தொடர்பான முடிவுகளை இருகட்சிகளின் தலைமை மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் உள்துறை மந்திரி அமித் ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
    • எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலரை இன்று சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

    அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்துறை மந்திரி அமித் ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

    இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வாகி இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளார்.

    டெல்லியில் அமித் ஷாவுடனான சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க. தலைவர்களும் நேற்று இரவு டெல்லியில் தங்கிய நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினோம். இந்த சந்திப்பின்போது பாஜக தேசிய தலைவர் நட்டாவும் இருந்தார். இது சம்பிரதாயமான சந்திப்பு தான். நாங்கள் 5 மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேசிவிட்டு சென்றோம். அதன் அடிப்படையில் மீண்டும் சந்தித்து பேசி உள்ளோம்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 1 ஆண்டு காலம் இருக்கிறது. 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தோம். அந்த கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்தது. ஈரோடு சட்டசபை இடைத்தேர்தலிலும் தொடர்ந்தது. எனவே பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    எனக்கும், அண்ணாமலைக்கும் கருத்து மோதல் இருக்கிறது என்பது தவறான கருத்து. எங்களுக்கும், அண்ணாமலைக்கும் எந்த வித தகராறும் கிடையாது. அப்படி இருந்தால் ஈரோட்டில் எப்படி அவர் பிரசாரம் செய்வார். அ.தி.மு.க.வுக்கும், பாஜகவுக்கும் விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு கேள்வி கேட்காதீர்கள். உள்நோக்கத்துடன் கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்?

    ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின்படி அவர்கள் செயல்படுவார்கள். கூட்டணி என்று வருகிறபோது நாங்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதுதான் அ.தி.மு.க.வின் கொள்கையாக இருந்து கொண்டிருக்கிறது.

    தி.மு.க.வில் அப்படி இல்லை. 10 ஆண்டு காலம் ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள். என்ன தவறு செய்தாலும் தட்டிக் கேட்பது கிடையாது. இப்போதுதான் அத்திபூத்தது போல் 12 மணி நேர வேலை தொடர்பாகத்தான் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். சட்ட மன்றத்திலும் சரி வெளியிலும் சரி, தி.மு.க. செய்த தவறுகளை அவர்களின் கூட்டணி கட்சியினர் ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசியது கிடையாது.

    அ.தி.மு.க. விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. தேர்தல் ஆணையமும் எங்களுக்கு நல்ல தீர்ப்பை தந்துவிட்டது. தற்போது எல்லாமே வெளிப்படை தன்மையாக உள்ளது. அ.தி.மு.க. எங்கள் பக்கம்தான் இருக்கிறது.

    ஓ.பன்னீர் செல்வம் மாநாடு நடத்துவது பற்றிய செயல்பாடுகளை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

    அமைச்சர் டி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ என்பது இன்று அதிர்ச்சியூட்டுகின்ற விஷயம். தமிழகத்தின் நிதி அமைச்சரே, ஆடியோவில் பேசியதாக செய்திகள் பரவலாக வெளிவந்திருக்கிறது. இது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. நிதி அமைச்சரே ஆடியோவில் பேசியதாக, ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக செய்தி வந்திருக்கிறது.

    அதில் 2 பேர் பெயரை சொல்கிறார். ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி வெளிப்படுகிறது.

    இதேபோல் 2-வது ஆடியோவும் வெளி வந்திருக்கிறது. அதிலும் சில கருத்துக்களை சொல்லி இருக்கிறார். இதை முழுமையாக விசாரிக்க வேண்டும். அவர் சில பதில்களை சொல்லி உள்ளார். இதில் வெட்டி, ஒட்டி செய்திகளை வெளியிட்டதாக சொல்லி இருக்கிறார். வெட்டியோ ஒட்டியோ நமக்கு தெரியாது.

    ஆனால் இந்த ஆடியோ செய்தி வந்து 3 நாட்கள் நாங்கள் எதையும் சொல்லவில்லை. இதில் உண்மை இருக்குமா, இல்லையா என்ற கருத்து நிலவிக் கொண்டிருக்கும் போது நாங்கள் எதையும் சொல்ல வில்லை. ஆனால் அவர் பத்திரிக்கை வாயிலாக செய்தி வெளியிட்ட பிறகுதான் இதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்கிற நிலைமை வந்தது. அதன் அடிப்படையில் நான் மதுரையிலேயே தெளிவாக சொன்னேன்.

    ஒரு நிதி அமைச்சரே ஆடியோ மூலமாக ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக சொல்லி இருக்கிறார். அந்த பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை என்ற கருத்தும் வெளியாகி இருக்கிறது. இது மிக மிக ஆபத்தானது. 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார்களா? இல்லையா? அவர் பேசிய பேச்சு ஆகியவற்றை ஆய்வு செய்து மத்திய அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். இதை ஒரு நிதி அமைச்சரே சொல்லி இருப்பதால் இது சாதாரணமானதல்ல.

    இதை எளிதாக பொருட்படுத்தாமல் விட்டு விடக்கூடாது. இதுபற்றி மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம். அவர் அந்த ஆடியோ செய்திகளை பார்த்ததாக சொல்லி இருக்கிறார்.

    இதில் உள்ள உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்கிற கருத்தை அமித்ஷாவிடம் வலியுறுத்தி இருக்கிறோம்.

    சி.ஏ.ஜி. அறிக்கையில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதி திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. எந்தெந்த நிதியை பயன்படுத்தவில்லை என்றுதான் கூறி இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் ரூ.28 ஆயிரம் கோடி செலவு செய்யவில்லை. கொரோனா காலத்தில் நாடே ஸ்தம்பித்துவிட்டது.

    2020 மார்ச் மாதத்தில் இருந்து ஒரு வருடம் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது இலக்கு நிர்ணயித்தோம். ஆனால் செலவு செய்ய முடியவில்லை. கொரோனா கட்டுப்பாட்டில் மக்கள் நடமாட கூடாது, பணி செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடுகளையும் விதித்தோம். அதனால் நிதியை பயன்படுத்த முடியவில்லை.

    ஆனால் 2021-22-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.28,868 கோடி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை விட குறைவாக செலவிட்டு இருக்கிறார்கள். ஆதி திராவிடர் வீட்டு வசதி வாரியத்தில் ரூ.1,498 கோடி செலவிடப்படவில்லை. ஏழை மக்களுக்கான இந்த விஷயத்தில் கூட கவனம் செலுத்தவில்லை. விவசாய துறையில் ரூ.1,174 கோடி செலவு செய்யவில்லை.

    மக்கள் நல்வாழ்வு துறையில் ரூ.1088 கோடி செலவு செய்யவில்லை. வீட்டு வசதி துறையில் ரூ.1,332 கோடி செலவு செய்யவில்லை. வருவாய்த் துறையில் ரூ.1,152 கோடி செலவு செய்யவில்லை. பள்ளிக் கல்வித்துறையில் ரூ.1,058 கோடி செலவு செய்யவில்லை. நெடுஞ்சாலைத் துறையில் ரூ.2,792 கோடி செலவு செய்யவில்லை. நீர் வளத்துறையில் ரூ.1,329 கோடி செலவு செய்யவில்லை. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைகூட தி.மு.க. ஆட்சியில் செலவு செய்யவில்லை.

    எங்களுடைய ஆட்சியின்போது கொரோனா காலம் என்பதால் வேலையே செய்யவில்லை. எங்களுடைய ஆட்சியில் எந்த டெண்டரில் முறைகேடு என்பதை சொல்ல முடியுமா?

    முதலில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். அது சுப்ரீம் கோர்ட்டு வரை வந்தது. இப்போது சென்னை ஐகோர்ட்டில் வழக்கை வாபஸ் பெறுகிறேன் என்று ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். எனவே எங்களை பற்றி சொல்வது அத்தனையும் பொய். அ.தி.மு.க. ஆட்சியில் அத்தனை விசயங்களையும் சிறப்பாக கையாண்டு இருக்கிறோம். அப்படி ஏதாவது முறைகேடு என்றால் எங்களுடைய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

    கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் நான் நேருக்கு நேர் பதில் சொன்னேன். கொட நாடு சம்பவம் நடந்தது அ.தி.மு.க. ஆட்சியில். நான் முதலமைச்சராக இருந்தேன். அதை கண்டுபிடித்தது அ.தி.மு.க. அரசாங்கம். அதில் குற்றவாளிகளை கைது செய்தது அ.தி.மு.க. அரசாங்கம். அவர்களை சிறையில் அடைத்தது அ.தி.மு.க. அரசாங்கம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அ.தி.மு.க. அரசாங்கம். நீதிமன்றத்தில் வழக்கு நடத்தியது அ.தி.மு.க. அரசாங்கம். அப்போது கொரோனா காலம். ஒரு வருடம் கோர்ட்டு விடுமுறையால் செயல்படவில்லை.

    அதன்பிறகு அந்த சாட்சிகள் வெளி மாநிலத்துக்கு சென்று விடுகிறார்கள். அவர்களை கண்டுபிடித்து மீண்டும் விசாரணை மேற்கொண்டபோது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. அடுத்தது வாதம், அதன் பிறகு தீர்ப்பு என்ற நிலையில் இருந்தது.

    அந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் வந்து விட்டது. அதன் பிறகு மீண்டும் இந்த வழக்கை எடுத்து விசாரிக்க சொல்கிறார்கள். இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முதன் முதலில் ஆரம்பித்தார். வழக்கு நாங்கள் போட்டு குற்றவாளிகளை கைது செய்தோம். அவர்களை ஜாமீனில் எடுத்தது தி.மு.க. குற்றவாளியை அவர்கள் ஜாமீனில் எடுக்கிறார்கள். அவர் தி.மு.க.வை சேர்ந்தவர். மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்தவர்தான் ஜாமீனில் எடுக்கிறார்.

    அதுமட்டுமின்றி ஒரு பாராளுமன்ற உறுப்பினரே குற்றவாளிகளுக்காக ஆஜராகி வாதாடுகிறார். ஜாமீன் பெற்று கொடுக்கிறார். இவர்கள் சாதாரண குற்றவாளிகள் அல்ல. கேரளாவில் பல கொடும் குற்றங்களை புரிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

    அப்படிப்பட்டவர்களுக்கு இவர்கள் ஏன் ஜாமீன் கேட்கிறார்கள்? தி.மு.க. வக்கீல் எதற்காக ஆஜராகிறார்கள்? இந்த வழக்கில் உண்மையை அறிய வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை முழுமையாக கண்டு பிடித்தது நாங்கள். குற்ற வாளிகளுக்கு அவர்கள் உடந்தையாக இருந்தால் உண்மை எப்படி வெளிவரும். கொடும் குற்றம் புரிந்தவருக்கும் ஜாமீன் தருபவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இவர்கள் தி.மு.க.வுக்குள் இருக்கின்றவர்கள். இவர் களுக்கும் அவர்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கின்ற காரணத்தினால்தான், 2 மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சினையால்தான் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

    என்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்த உடனேயே ஒரு சிலரை தவிர்த்து அ.தி.மு.க. மீது நன் மதிப்பு வைத்து இந்த இயக்கம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விசுவாசமிக்கவர்கள் யார் யார் இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் கட்சியில் சேர்த்துக் கொள்வோம். இந்த கட்சிக்கு துரோகம் செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த கட்சியில் இடம் இல்லை. எனவே யார் யார் இடம் பெற மாட் டார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

    ஆடியோவில் மிகப்பெரிய செய்தி வந்திருக்கிறது. இது அதிர்ச்சியான செய்தி என்று யாராவது என்னிடம் கேள்வி கேட்பீர்களா?

    இந்த ஆடியோ விவகாரம் முழுக்க முழுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தை சேர்ந்தவர்களுடைய பிரச்சினை. அந்த குடும்பத்தில் இருக்கின்றவர்கள்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் ஆட்பட்டவர்கள்.

    இதை நான் சொல்லவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருக்கும் நிதி அமைச்சர் சொல்கிறார். நிதி அமைச்சர் சொன்னதற்கு ஏன் முதலமைச்சர் பதில் சொல்லவில்லை. எது எதற்கோ முதலமைச்சர் பதில் சொல்கிறார். ஏன் இதற்கு அவர் பதில் சொல்லவில்லை. இதனால்தான் சந்தேகம் ஏற்படுகிறது.

    இந்த விவகாரத்தை மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம். அது அவரது கவனத்துக்கு ஏற்கனவே வந்ததாக கூறினார். அவரிடம் இது ஒரு மாநிலத்தின் பிரச்சினை அல்ல. ஒரு நாட்டின் பிரச்சினை. ரூ.30 ஆயிரம் கோடி என்பது சாதாரண விஷயமல்ல. இந்த விவகாரத்தை நீங்கள் ஆழமாக எடுத்துக்கொண்டு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறோம்.

    ஒரு சாதாரண விவசாயி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அளவு உயர்ந்திருக்கிறேனே என்று பாராட்ட மனதில்லாமல் கேள்வி கேட்கிறீர்களே. உங்களின் உள்நோக்கம் புரிகிறது. நான் இந்த அளவுக்கு வந்ததே பெரிய விஷயம். நல்ல ஆட்சியையும் கொடுத்து இருக்கிறேன். இந்த பெரிய கட்சியை எல்லா பகுதியில் இருந்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடைத்துக் கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க.வை எப்படியாவது உடைக்க வேண்டும்? எப்படியாவது முடக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நோக்கம். இதையெல்லாம் அவர் செய்து பார்த்தார். ஒன்றும் முடியவில்லை.

    நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும் போது தி.மு.க.வினர் சபாநாயகரை பிடித்து கீழே இழுத்துவிட்டு, எனது மேஜையில் நடனம் ஆடி மைக்கை உடைத்தனர்.

    சபாநாயகரை மிகவும் தரக்குறைவாக பேசினார்கள். அவருடைய இருக்கையில் போய் எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தவர்தான் இன்றைய முதலமைச்சர்.

    இப்படியெல்லாம் நடந்தும் கூட நாட்டு மக்களுக்கு 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி கொடுத் தோம். எந்த இடத்துக்கு போனாலும் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பான ஆட்சி என்றுதான் சொல்கிறார்கள்.

    ஆனால் இந்த 2 ஆண்டு காலத்தில் தி.மு.க. ஆட்சியில் எங்கு சென்றாலும் இந்த ஆட்சி எப்போது போகும் என்று தான் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

    தி.மு.க.வின் 'பி' அணி யாக ஓ.பி.எஸ். செயல்பட்டுக் கொண்டி ருக்கிறார். இது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்.

    அ.தி.மு.க.வில் உருவாக்கப்பட்ட முடிவு எல்லாமே பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு. ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழுதான் பதவி கொடுத்தது. எனக்கும் பொதுக்குழுதான் பதவி கொடுத்தது. அவருக்கு பதவி கொடுத்தால் சிறந்த பொதுக்குழு என்கிறார். பொதுக்குழு வேறு முடிவு எடுத்தால் சரியில்லை என்கிறார். எங்களின் கட்சியை பொறுத்தவரை இறுதி அதிகாரம் பொதுக்குழுவுக்குத்தான் இருக்கிறது. பொதுக்குழு எடுக்கும் முடிவுக்குத்தான் அனைவரும் கட்டுப்படுவார் கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×