என் மலர்
நீங்கள் தேடியது "எஸ் எஸ் சக்ரவர்த்தி"
- தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி.
- இவர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்.
தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி (55) புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்.
அஜித் நடித்த ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, வரலாறு என பல படங்களை சக்ரவர்த்தி தயாரித்துள்ளார். மேலும், விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.

எஸ்.எஸ்.சக்ரவர்த்தி
இறுதியாக விமல் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த விலங்கு என்ற இணைய தொடரில் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி காவல் அதிகாரியாக நடித்திருந்தார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு காலமானார்.

எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வைரமுத்து
எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவிற்கு கவிஞர் வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் "நண்பா!
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி!
மறைந்துவிட்டாயா?
அஜித்தை வைத்து நீ தயாரித்த
வாலி, முகவரி, சிட்டிசன்
ரெட், வில்லன், ஆஞ்சநேயா
வரலாறு ஆகிய 7படங்களுக்கும்
என்னையே எழுத வைத்தாயே
தமிழ்க் காதலா!
காசோலைகள்
வந்த இடத்திலிருந்து
சாவோலையா?
கலங்குகிறேன்;
கலையுலகம் உன் பேர்சொல்லும்" என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
நண்பா!
— வைரமுத்து (@Vairamuthu) April 29, 2023
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி!
மறைந்துவிட்டாயா?
அஜித்தை வைத்து நீ தயாரித்த
வாலி, முகவரி, சிட்டிசன்
ரெட், வில்லன், ஆஞ்சநேயா
வரலாறு ஆகிய 7படங்களுக்கும்
என்னையே எழுத வைத்தாயே
தமிழ்க் காதலா!
காசோலைகள்
வந்த இடத்திலிருந்து
சாவோலையா?
கலங்குகிறேன்;
கலையுலகம் உன் பேர்சொல்லும் pic.twitter.com/t9ZuUQv659