என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுவை கடற்கரை"
- புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் கடலோர தூய்மை பணி நடந்தது.
- தூய்மை பணியை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் இணைந்து குப்பைகளை அகற்றினார்.
புதுச்சேரி:
சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி இந்திய கடலோர காவல் படை சார்பில் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் கடலோர தூய்மை பணி நடந்தது.
தூய்மை பணியை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் இணைந்து குப்பைகளை அகற்றினார்.
அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., அரசு செயலர்கள் பத்மா ஜெய்ஸ்வால், ஜெயந்தகுமார் ரே, டி.ஜி.பி. அஜித்குமார் சிங்ளா, இந்திய கடலோரக் காவல்படை கமாண்டன்ட் எஸ். எஸ். தசிலா, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
- கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுவை கடற்கரையைதான்.
- கடல் நீரைவிட செம்மண் நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் கடலில் தனியாக தெரிகிறது.
புதுச்சேரி:
புதுவை கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம்.
கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுவை கடற்கரையைதான்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் வந்திருந்தனர்.
அப்போது திடீரென பழைய வடிசாராய ஆலையின் பின்புறம் உள்ள குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரின் நிறம் மாறியிருந்தது. பிற பகுதிகளில் நீல வண்ணத்தில் இருக்கும்போது, அந்த பகுதி மட்டும் செம்மண் நிறத்தில் மாறியிருந்தது. ஒரு கிலோ மீட்டர் அளவில் குருசுகுப்பம் பகுதி வரை செம்மண் நிறமாக காட்சியளித்தது.
இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த சுற்றுலா பயணிகள் தலைமை செயலகம் எதிரே உள்ள மணல் பரப்பில் இறங்கி, நிறம் மாறியிருந்த கடலின் அழகை புகைப்படம் எடுத்தனர்.
இது தொடர்பாக மீனவர்களிடம் கேட்டபோது ஆரோவில் பகுதியில் மழை பெய்தால், அங்குள்ள செம்மண் மேட்டு பகுதிகளில் உள்ள மணல் சரிந்திருக்கும், இதனால் அந்த செம்மண் நீர் நகர்ந்து கடலுக்கு வந்திருக்கும் என்றனர்.
கடல் நீரைவிட செம்மண் நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் கடலில் தனியாக தெரிகிறது. அலையில் செம்மண் கடற்கரையில் தேங்கியதும் நிறம் மீண்டும் நீலமாக மாறும் என்றனர்.
- ஜனாதிபதி நடைபயிற்சிக்காக துப்புரவு பணியாளர்கள் கடற்கரை சாலையை சுத்தப்படுத்தியிருந்தனர்.
- அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்ற ஜனாதிபதி அங்கு அரவிந்தர் மற்றும் அன்னை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்தார்.
புதுச்சேரி:
புதுவைக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை 6 மணி முதல் 6.45 மணி வரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நடைபயிற்சி மேற்கொள்வார் என்பதால் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள போலீசார் தடை விதித்திருந்தனர்.
இன்று காலை 5.25 மணிக்கே தங்கியிருந்த விருந்தினர் மாளிகையிலிருந்து ஜனாதிபதி நடைபயிற்சிக்கு கிளம்பினார்.
தொடர்ந்து ஜனாதிபதி கடற்கரை சாலையில் நடைபயிற்சி செய்தார். ஜனாதிபதி நடைபயிற்சிக்காக துப்புரவு பணியாளர்கள் கடற்கரை சாலையை சுத்தப்படுத்தியிருந்தனர். நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் கடற்கரையில் இருந்தனர்.
ஜனாதிபதி முன்கூட்டியே நடைபயிற்சி தொடங்கியதை தொடர்ந்து அவர்களும் ஜனாதிபதியோடு நடந்தனர். புஸ்சி வீதி விருந்தினர் மாளிகையிலிருந்து பழைய கலங்கரை விளக்கம் வரை ஜனாதிபதி நடந்து சென்று திரும்பினார்.
அப்போது காந்தி சிலையை நின்று பார்த்தார். அங்கிருந்த அதிகாரிகள், சிலை வரலாறு குறித்து தெரிவித்தனர். பழைய கலங்கரை விளக்கம், புதிதாக நிறுவப்பட்டுள்ள தியாகச்சுவர், தேசிய கொடிக்கம்பம் ஆகியவற்றை ஜனாதிபதி பார்த்தார். அவரோடு நடந்து வந்த அதிகாரிகள் சிலர் ஜனாதிபதியுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
மீண்டும் ஜனாதிபதி 6.05 மணிக்கு விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். சுமார் 40 நிமிடம் ஜனாதிபதி நடைபயிற்சி மேற்கொண்டார்.
பின்னர் காலை உணவு சாப்பிட்ட பின் புதுவை முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அதன் பின்னர் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்ற ஜனாதிபதி அங்கு அரவிந்தர் மற்றும் அன்னை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்தார்.
அதனைதொடர்ந்து அங்கிருந்து ஜனாதிபதி ஆரோவில் சென்றார். அங்குள்ள மாத்ரி மந்திரில் தியானம் செய்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஓவிய கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்.
அதன்பின்னர் அங்கு நடந்த அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசினார்.
ஜனாதிபதி வருகையையொட்டி புதுவை ஆரோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரும் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
- வாழ்க்கைப் பணி மற்றும் கடலோர விழிப்புணர்வை மேம்படுத்தும் தெரு நாடகம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாடு குழும நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்துடன் இணைந்து கடற்கரையை தூய்மை படுத்தி, தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுவை காந்தி திடலில் ஜி20 கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அவர்களுடன் இணைந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரும் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் வாழ்க்கை நோக்கம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை, மற்றும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் விழிப்புணர்வு நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர் .
வாழ்க்கைப் பணி மற்றும் கடலோர விழிப்புணர்வை மேம்படுத்தும் தெரு நாடகம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் முத்தம்மா, உள்ளாட்சி துறை, நகராட்சி மற்றும் இத்துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேசிய சேவை திட்டம், தேசிய மாணவர் படை பள்ளி கல்லூரி மாணவர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் தூய்மை நிகழ்ச்சி நடந்தது.
- கோடை விடுமுறை என்பதாலும் தொழிலாளர் தினத்தையொட்டி தொடர் விடுமுறை என்பதாலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
- மழையில் நனைந்த சுற்றுலா பயணிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கடலில் இறங்கி குளித்தனர்.
புதுச்சேரி:
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோடை விடுமுறை என்பதாலும் தொழிலாளர் தினத்தையொட்டி தொடர் விடுமுறை என்பதாலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
இன்று அதிகாலை முதலே புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது.
சூரிய உதயத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். அப்போது திடீரென மழை பெய்தது. 10 நிமிடம் நீடித்த மழை சுற்றுலா பயணிகளிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மழையில் நனைந்த சுற்றுலா பயணிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கடலில் இறங்கி குளித்தனர். கடற்கரை சாலையில் கடலில் குளிக்காதீர்கள் என்ற எச்சரிக்கையையும் மீறி குடும்பத்தோடு குளித்து மகிழ்ந்தனர்.
புதுவை நோணாங்குப்பம் படகு குழாமில் படகில் சவாரி செய்து பாரடைஸ் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி சென்றனர்.
இதேபோல் புதுவையின் சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, ஊசுட்டேரி மற்றும் ஒயிட் டவுன் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர்.
மதிய வேளையில் பிரபல உணவகங்களில் மேஜையை பிடிக்க வரிசையில் நின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்