என் மலர்
நீங்கள் தேடியது "மாட்ரிட் ஓபன் டென்னிஸ்"
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றது.
- நார்வே வீரர் காஸ்பர் ரூட் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், பிரிட்டன் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-5 என காஸ்பர் ரூட் கைப்பற்றினார். பதிலுக்கு டிராபர் 2வது செட்டை 6-3 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என காஸ்பர் ரூட் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- இத்தாலி வீரர் முசெட்டி அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, பிரிட்டன் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டிராபர் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரிட்டனின் ஜாக் டிராபர், காஸ்பர் ரூட் உடன் மோதுகிறார்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- நார்வே வீரர் காஸ்பர் ரூட் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், அர்ஜெண்டினா வீரர் பிரான்சிஸ்கோ செருண்டலோ உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய காஸ்பர் ரூட் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- இத்தாலி வீரர் முசெட்டி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, கனடா வீரர் கேப்ரியல் டியல்லோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய முசெட்டி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் இத்தாலி வீரர் முசெட்டி, பிரிட்டனின் ஜாக் டிராபரை சந்திக்கிறார்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- பெலாரஸ் வீராங்கனை சபலென்கா அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சபலென்கா, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதுகிறார்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- அமெரிக்க வீராங்கனை கோகோ காப் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய கோகோ காப் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனால் இகா ஸ்வியாடெக் தொடரில் இருந்து வெளியேறினார்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- ரஷிய வீரர் மெத்வதேவ் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஒன்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், நார்வே வீரர் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய காஸ்பர் ரூட் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தினார். இதன்மூலம் காஸ்பர் ரூட் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் காஸ்பர் ரூட், அர்ஜெண்டினா வீரர் பிரான்சிஸ்கோ செருண்டலோவை சந்திக்கிறார்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- பெலாரஸ் வீராங்கனை சபலென்கா காலிறுதியில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்டியூக் உடன் மோதினார்.
இதில் சபலென்கா முதல் செட்டை 7-6 (7-4) என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் உக்ரைன் வீராங்கனை கடும் சவால் அளித்தார்.
சபலென்கா 2வது செட்டை 7-6 (9-7) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறார்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- போபண்ணா ஜோடி 2வது சுற்றில் தோல்வி அடைந்தது.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அர்ஜெண்டினாவின் ஆண்ட்ரஸ் மால்டேனி-மேக்சிமோ கோஜாலே ஜோடி உடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 4-6, 7-6 (7-5), 11-9 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- ரஷிய வீரர் மெத்வதேவ் 4வது சுற்றில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமா உடன் மோதினார்.
இதில் 3-6 என முதல் செட்டை இழந்த மெத்வதேவ் அடுத்த இரு செட்களை6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் மெத்வதேவ், காஸ்பர் ரூட் உடன் மோதுகிறார்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- அமெரிக்க வீராங்கனை கோகோ காப் காலிறுதியில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.
இதில் கோகோ காப் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஜப்பானின் உசிஜிமாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.