என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ்குமார் பெரியசாமி"

    • பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் 26 பேர் உயிரிழப்பு.
    • அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் குறித்து அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல், மனிதத்துக்கும், அமைதிக்கும் ஒரு பேர் இடியாகும்.

    ஆண்டுதோறும் 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பஹல்காம், காஷ்மீரின் இதயம் போன்றது.

    அமரன் படப்பிடிப்பின்போது, பல அற்புதமான நினைவுகள் அங்கு ஏற்பட்டன. அங்குள்ள மக்கள் எங்களிடம் மிகவும் அன்போடு நடந்துகொண்டனர்!

    தாக்குதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மடோன் அஷ்வின் இயக்கி வரும் மாவீரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.


    ராஜ்குமார் பெரியசாமி - கமல் - சிவகார்த்திகேயன்

    ராஜ்குமார் பெரியசாமி - கமல் - சிவகார்த்திகேயன்


    இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் சிவார்த்திகேயன் படத்திற்கு முதல் முறையாக ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


    எஸ்கே21

    எஸ்கே21

    இந்நிலையில் 'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு வெளியிட்ட வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் 'எஸ்கே21' படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


    எஸ்கே21

    எஸ்கே21

    இந்நிலையில் 'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு 55 நாட்கள் காஷ்மீரில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இப்படம் உணர்வுகளையும் தேசபற்றையும் மையப்படுத்தி உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'எஸ்கே21' திரைப்படம் சிவாகார்த்திகேயனின் புதிய பரிமாணமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • ரங்கூன் படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி.
    • இவர் தற்போது 'எஸ்கே21' படத்தை இயக்கி வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


    எஸ்.கே.21

    இராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 55 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருப்பதால் அது தொடர்பான பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறுகின்றன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பாதுகாப்பு, அதிகாரிகளால் நிறுத்தப்பட்டதாகவும் இதையடுத்து படக்குழு சென்னை திரும்பியதாகவும் தகவல் வெளியானது.


    ராஜ்குமார் பெரியசாமி பதிவு

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. அதாவது, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனது சமூக வலைதளத்தில் கேமராவின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை அதிகம் பகிர்ந்து வரும் ரசிகர்கள் 'எஸ்கே21' படப்பிடிப்பு தொடங்கியதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் படத்தை தொடர்ந்து தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.



    'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் இடைவெளி இல்லாமல் நடைபெற்று வருவதாகவும் இந்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒரு கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


    'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, 75 நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.





    • நடிகை சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.


    பின்னர் 'மாரி 2', 'என்.ஜி.கே', 'கார்க்கி' என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பூஜையின் போது நடிகை சாய்பல்லவியும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை கிராப் செய்த சிலர் இவர்களுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டதாக வதந்தியை பரப்பி வருகின்றனர்.


    இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாய் பல்லவி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நான் வதந்திகளை கண்டுகொள்வது இல்லை, ஆனால் குடும்பத்தை போன்று இருக்கும் நண்பர்களை குறித்து வதந்திகள் பரவும் போது அதை பற்றி நான் பேச வேண்டும். என் படப்பிடிப்பு பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வேண்டுமென்றே கிராப் செய்து காசுக்காகவும் அருவருப்பான நோக்கத்துடனும் பரப்பி வருகின்றனர். என் அடுத்தடுத்த படம் குறித்த மகிழ்ச்சியான தகவல்களை வெளியிடலாம் என்கிறபோது இது போன்ற அர்த்தமற்ற செயல்களுக்கு விளக்கமளிப்பது வேதனையாகவுள்ளது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.


    • நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ளார். இவரது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, டாக்டர், டான் போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.


    இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் இன்று ஆயுத பூஜையை கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • தனது 32-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் சாய் பல்லவி. அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
    • அவர் நடித்து வரும் அமரன் திரைப்படக்குழு சாய் பல்லவியை வாழ்த்தும் விதமாக ஒரு சிறப்பு போஸ்டரை பகிர்ந்துள்ளனர்.

    பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு முதல் படத்திலேயே திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

    தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சாய் பல்லவி மாரி 2 படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். வாயாடி பெண்ணாக படத்தில் அவர் நடித்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. உடல் கவர்ச்சியை காட்டாமல் வசீகரம் கலந்த முகத்துடன் உள்ள அவரது நடிப்பு மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி திரை உலகங்களில் பேசப்படும் வகையில் அமைந்தது.

    அவர் நடித்து வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. நிதேஷ் திவாரி இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் தனது 32-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் சாய் பல்லவி. அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சாய் பல்லவி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் தண்டேல் படக்குழு ஒரு சிறப்பு வீடியோவை பகிர்ந்தது அந்த வகையில் அவர் நடித்து வரும் அமரன் திரைப்படக்குழு சாய் பல்லவியை வாழ்த்தும் விதமாக ஒரு சிறப்பு போஸ்டரை பகிர்ந்துள்ளனர். கமல்ஹாசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் செய்கிறார்.

    சிவகார்த்திகேயேன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்திய ராணுவப் படை வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் தற்பொழுது இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளில் உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • "முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன், ராணுவ வீரராக நடித்திருக்கிறார்.
    • இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ராஜ்கமல் நிறுவனம் அறிவித்திருந்தது

     இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படத்தில்"முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

    மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.  படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

    அந்த வகையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ராஜ்கமல் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி அமரன் திரைப்படம்  தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என்ற போஸ்டரை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • "அமரன்" படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
    • இந்தப் படத்தை நடிகர் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி கூட்டணியில் உருவான படம் "அமரன்." கடந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான "அமரன்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும், வசூலையும் வாரி குவித்து வருகிறது.

    ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பலர் "அமரன்" படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் பொன்ராம் "அமரன்" படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "அமரன் சிவகார்த்திகேயன் சார், இது உங்களின் அடுத்த மைல்கல். கடின உழைப்புக்காக சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவுக்கு தேசிய விருது கிடைக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

    "அமரன்" படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சாய் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×