என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சதா"
- ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் "அந்நியன்".
- இந்நிலையில் இந்த திரைப்படம் 4கே தரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மறு வெளியீடு செய்யப்பட்டது.
ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் "அந்நியன்". இது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆரம்பத்திலும் பின்னர் பிரெஞ்சு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவந்தது. இதுவே பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரான்சில் திரையிடப்பட்ட முதலாவது இந்தியத் திரைப்படமாகும்.
ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மூன்று சிறப்பு தோற்றங்களில் நடித்திருந்தார். மேலும், பிரகாஷ் ராஜ், சதா மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த திரைப்படம் 4கே தரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மறு வெளியீடு செய்யப்பட்டது. தெலுங்கில் "அபரிசித்துடு" என்ற பெயரில் இந்த திரைப்படம் வெளியானது. இதனை தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்நியன் போன்று வேடமிட்டு திரையரங்கில் ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெயம், எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற பல படங்களில் நடித்தவர் சதா.
- இவர் நேரலையின் போது கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நடிகை சதா 2002 ஆம் ஆண்டு ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான 'ஜெயம்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் நித்தின் நடித்திருந்த நிலையில், கதாநாயகியாக சதா தான் நடித்திருந்தார். மேலும் முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதையும் பெற்றார்.
'ஜெயம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற பல படங்களில் அஜீத், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த சதா, திடீர் என பட தயாரிப்பிலும் களமிறங்கினார். தனியார் வங்கியில் கடன் வாங்கி கடந்த 2018 ஆம் ஆண்டு இவர், தயாரித்து நடித்திருந்த திரைப்படம் 'டார்ச் லைட்'. இதில் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். தன்னுடைய கணவனை காப்பாற்ற பாலியல் தொழிலாளியாக மாறும் ஒரு பெண், பின்பு ஏன் கணவரையே கொலை செய்ய துணிகிறாள் என்பதை பரபரப்பான காட்சிகளுடன் படமாக்கப்பட்டிருந்தது 'டார்ச் லைட்' திரைப்படம்.
அந்தப்பட்ம் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பின் எலி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார். 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சதா, தான் சம்பாதித்த பணத்தை வைத்து மும்பையில் ஓட்டல் பிசினஸ் ஒன்றை துவங்கினார். எர்த்லிங்ஸ் கபே என்கிற பெயரில் சுமார் 4 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக இந்த ஓட்டல் இயங்கி வருகிறது.
சதாவும் ஒரு நாளைக்கு சுமார் 12 மணிநேரம் இந்த கபே-வில் தான் நேரம் செலவழித்து, தன்னுடைய வியாபாரத்தை பார்த்து வந்தார். ஆனால் தற்போது திடீர் என, 'எர்த்லிங்ஸ் கபே' இயங்கி வரும் இடத்தின் உரிமையாளர். அந்த இடத்தை காலி செய்ய சொல்வதாகவும், எவ்வளவோ இந்த சூழலை மாற்ற முயற்சித்த போதும் அது முடியாமல் போய் விட்டது என நேரலையில் பேட்டி கொடுத்த போது சதா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்