search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுமன்"

    • ஆந்திர மாநிலத்தில் நடிகை ரோஜா, நடிகர்கள் பாலகிருஷ்ணா, பவன் கல்யாண் ஆகியோர் தீவிர அரசியலில் உள்ளனர்.
    • இந்த நிலையில் நடிகர் சுமன் தீவிர அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

    ஆந்திர மாநிலத்தில் நடிகை ரோஜா, நடிகர்கள் பாலகிருஷ்ணா, பவன் கல்யாண் ஆகியோர் தீவிர அரசியலில் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சுமன் தீவிர அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோமாட்டிப்பா கிராமத்தில் நேற்று தனியார் நிகழ்ச்சியில் நடிகர் சுமன் கலந்து கொண்டார். அப்போது அவர், நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் பேரிடர்கள் ஏற்படுகின்றன, எனவே முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும். நெற்பயிர் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். எந்த ஒரு அரசும் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார்.

    நடிகர் சுமன் பா.ஜ.க. அல்லது தெலுங்கு தேசம் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • ஆந்திராவின் முன்னாள் முதல்-அமைச்சர் என்.டி. ராமாராவ் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினி சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தற்போது நடிகர் சுமன் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியுள்ளார்.

    ஆந்திராவின் முன்னாள் முதல்-அமைச்சர் என்.டி. ராமாராவ் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினி சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நடிகர் சுமன் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஐதராபாத் நகரின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம். அவரது ஆட்சியில் விமான நிலையம், தொழில் நுட்ப நிறுவனங்கள் ஏராளமானவற்றை கொண்டு வந்தார். இந்த நிறுவனங்கள் மூலம் இப்போது எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதற்கெல்லாம் காரணம் சந்திரபாபுவின் திட்டமே. அரசியலில் ஏற்ற தாழ்வுகள் உண்டு. அவர் நல்ல முதல்-அமைச்சர்.

    நடிகர் ரஜினி தனது உரையில் எந்த கட்சியையும், தலைவரையும் விமர்சிக்கவில்லை. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்து ரஜினிகாந்த் எதுவும் குறிப்பிடாவிட்டாலும், அவரை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

    ரஜினியை தொடர்ந்து நடிகர் சுமன் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசி உள்ளது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நடிகர் சுமனின் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    ×