search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் வெடிப்பு"

    • ரெயில் பெட்டிகளின் கதவுகள் திறக்கப்பட்டு புகை முழுவதும் வெளியேற்றப்பட்டது.
    • இந்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து மைசூரு செல்லும் வந்தே பாரத் ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை கடந்து சென்றபோது ரெயிலில் இருந்த பயணியின் செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    வந்தே பாரத் ரெயிலின் C11 பெட்டியில் பயணித்த குஷ்நாத்கர் என்பவர் செல்போன் சார்ஜ் போட்டிருந்தபோது திடீரென வெடித்தது.

    செல்போன் வெடித்து புகை வந்ததால் பயணிகள் கூச்சலிட்டதை அடுத்து வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது.

    பின்னர் ரெயில் பெட்டிகளின் கதவுகள் திறக்கப்பட்டு புகை முழுவதும் வெளியேற்றப்பட்டது.

    பயணிகளுக்கு எந்தபாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் சுமார் 35 நிமிடங்கள் காலதாமதமாக வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்றது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் சார்ஜ் போட்டபோது செல்போன் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செல்போன் வெடித்து வடமாநில வாலிபர் படுகாயம்.
    • ரெயில் 35 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.

    ஜோலார்பேட்டை:

    சென்னை-மைசூரு செல்லும் வந்தே பாரத் ரெயில் இன்று காலை 8 மணி அளவில் வாணியம்பாடி அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது ரெயிலில் பயணம் செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த குஷ்நாத்கர் (வயது 31) என்பவர், தனது செல்போனை சார்ஜ் போட்டபடி பயன்படுத்தி வந்தார். திடீரென செல்போன் சூடாகி, பயங்கர சதத்துடன் வெடித்து சிதறியது. இதில் படுகாயம் அடைந்த வடமாநில வாலிபர் வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டார்.

    செல்போன் வெடித்த போது புகை கிளம்பியதால் அந்த பெட்டியில் பயணம் செய்த சக பயணிகள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டதால், ரெயில் பாதியில் நிறுத்தப்பட்டது.

    தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று, 2 ரெயில் பெட்டிகளின் பிரதான கதவுகளைத் திறந்து புகையை அகற்றினர்.

    இதன்பிறகு ரெயில் 35 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோகிலாம்பாள், கபிஸ்தலம் அருகே உள்ள ஒரு கடையில் கடிகாரம் மற்றும் செல்போன் ரிப்பேர் கடை வைத்து நடத்தி வந்தார்.
    • கோகிலாம்பாள் உடல் முழுவதும் தீப்பிடித்து அவர் கடையிலேயே தீயில் கருகி இறந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள விசித்திரராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பிரபாகரன் மனைவி கோகிலாம்பாள்(வயது 33). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கோகிலாம்பாள், கபிஸ்தலம் அருகே உள்ள மேல கபிஸ்தலம் கொத்த தெரு பகுதியில் உள்ள ஒரு கடையில் கடிகாரம் மற்றும் செல்போன் ரிப்பேர் கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் கோகிலாம்பாள் தனது கடையில் செல்போனை சார்ஜில் போட்டபடியே செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென செல்போன் வெடித்து தீ பிடித்தது.

    இதில் கோகிலாம்பாள் உடல் முழுவதும் தீப்பிடித்து அவர் கடையிலேயே தீயில் கருகி இறந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரளாவில் கடந்த மாதம் 24-ந்தேதி திருச்சூரில் செல்போனில் வீடியோ பார்த்த 8 வயது சிறுமி செல்போன் வெடித்து இறந்தார்.
    • சம்பவம் நடந்த 2 வாரத்தில் மீண்டும் சம்பவம் நடந்திருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஹரீஸ் ரகுமான் (வயது 23). ரெயில்வே துறையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இவர் தனது செல்போனை கால்சட்டை பையில் வைத்திருந்தார். அப்போது திடீரென அந்த செல்போன் வெடித்தது. அதோடு கால்சட்டையும் தீப்பிடித்து எரிந்தது. இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு அலறினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கேரளாவில் கடந்த மாதம் 24-ந்தேதி திருச்சூரில் செல்போனில் வீடியோ பார்த்த 8 வயது சிறுமி செல்போன் வெடித்து இறந்தார். இந்த சம்பவம் நடந்த 2 வாரத்தில் மீண்டும் அது போன்ற சம்பவம் நடந்திருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×