என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெட் ஜெயண் மூவிஸ்"

    • நடிகர் அருள்நிதி தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.


    கழுவேத்தி மூர்க்கன்

    இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


    கழுவேத்தி மூர்க்கன் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இதைத்தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 'இறைவன்', 'சைரன்' போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


    ஏ.ஆர்.ரகுமான் -நித்யா மேனன்

    இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் அடுத்தப்படத்தை 'வணக்கம் சென்னை', 'காளி', 'பேப்பர் ராக்கெட்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×