என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடிநீர் வினியோகம்"
- வில்லானேந்தல் கிராமத்திற்கு முதல்முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
- இதனை கிராம பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கி விழாவாக கொண்டாடினர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள எம். புதுக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வில்லானேந்தல் கிராமத்தில், பல ஆண்டு களாக மக்கள் கண்மாய் தண்ணீரை தேக்கி வைத்து, அதனை குடிநீராகவும், மற்ற உபயோகத்திற்கும் பயன்படுத்தி வந்தனர்.தற்போது உள்ள கால கட்டத்தில், தனியாரிடம் குடிநீரை குடம் ஒன்று ரூ.7 க்கு விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், பல்வேறு இடங்களில் போர் வெல் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோ கிக்க பல முறை முயற் சித்தும், அது உப்பு தண்ணீராகவும் குடிநீருக்கு உகந்த தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டதால், பயனளிக்காமல் போய் விட்டது.
இது குறித்து ஊராட்சித் தலைவர் முருகன் மற்றும் கிராம பொது மக்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு குடிநீர் கேட்டு பல்வேறு மனுக்களை நேரில் சென்றும் பதிவு தபால் மூலமா கவும் கோரிக்கை மனுவை அளித்தனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ஊராட்சியின் உபரி நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் குண்டாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரையின் கீழ் பைப் லயன் அமைத்து வில்லானேந்தல் கிராமத்திற்கு முதல் முறையாக குடிநீர் வினி யோகம் வழங்கப்பட்டது.
இதனை கிராம பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கி விழாவாக கொண்டாடினர்.
- கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் காவிரியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
- ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது.
தருமபுரி:
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு 290 கிலோ மீட்டா் பயணித்து தமிழகத்தில் பிலிகுண்டுலு பகுதியில் நுழைந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆறு வழியாக மேட்டூர் அணையை சென்றடைகிறது.
மேட்டூர் அணையில் இருந்து சுமார் 12-க்கும் மேற்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாட்டுக்கும் காவிரி நீர் பயன்படுகிறது.
ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும்.
கர்நாடக மாநிலத்தில் மழை பெய்ய தொடங்கினால் அங்குள்ள கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை சென்றடையும்.
இந்த ஆண்டு பருவ மழை தொடங்காத காரணத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடியாக குறைந்துள்ளது.
நீர்வரத்து குறைந்ததன் காரணமாக பறந்து விரிந்த காவிரி ஆறு, சிறு ஓடை போல சுருங்கி தண்ணீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நின்று காட்சி அளிக்கிறது.
தண்ணீர்வரத்து இல்லாத காரணத்தால் ஆற்றுப்பகுதி பாறைகளாக காட்சியளிக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி முதல் 2.85 கன அடி வரை தண்ணீா் ஒகேனக்கல் பகுதியை கடந்து சென்றது.
தற்போது தண்ணீா் வழிந்தோடிய பகுதிகள் வறண்டு பாறை முகடுகளாக காணப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கூட்டு குடிநீர் ஏற்றும் பகுதிக்கு தண்ணீர் வராததால் மணல் மூட்டைகளை அடுக்கி சிறு ஓடைகளாக ஓடும் தண்ணீரை தேக்கி நீர் ஏற்றப்படுகிறது.
400 கன அடியில் இருந்து 300 கன அடியாக நீர் வரத்து குறைந்துள்ளது.
கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத் துறை அமைச்சருமான சிவகுமார் தெரிவித்து வருகிறார்.
தற்பொழுது காவிரி ஆற்றில் குறைந்து வரும் நீரால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும்.
உடனடியாக தமிழக, மத்திய அரசு மற்றும் கர்நாடகா அரசிடம் பேசி மத்திய அரசின் நதி நீர் ஆணையம் பிறப்பித்துள்ள ஆணையின் படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் காவிரியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
இந்த ஆண்டு நீர்வரத்து இல்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆறு வறண்டு வருகிறது. ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது.
கடந்தாண்டு ஜூலை 15-ம் தேதி காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் முதல் 2.85 கனஅடி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பொதுமக்கள் அவதி
- தொட்டிகளை சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வலியுறுத்தல்
வந்தவாசி:
வந்தவாசி அருகே ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடும் பங்களுக்கு 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீருக்காக பயன் படும் கிணறுகளை சுத்தம் செய்யப்படாமலும், 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முழுவதும் பாசி மற்றும் தூசு துகள்கள் படிந்து சுத்தம் செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் குடிநீர் வினியோகம் செய்யும்போது தண்ணீர் கருப்பாகவும், அதிகளவில் பாசி, தூசு துகள்கள் கலந்து வரு வதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
மேலும் இந்த குடிநீர் குடிக்கும்போது உடல் உபா தைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்ற னர்.
எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து கிணறு மற்றும் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்