search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வில்லானேந்தல் கிராமத்திற்கு முதல்முறையாக குடிநீர் வினியோகம்
    X

    வில்லானேந்தல் கிராமத்திற்கு முதல்முறையாக குடிநீர் வினியோகம்

    • வில்லானேந்தல் கிராமத்திற்கு முதல்முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    • இதனை கிராம பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கி விழாவாக கொண்டாடினர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள எம். புதுக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வில்லானேந்தல் கிராமத்தில், பல ஆண்டு களாக மக்கள் கண்மாய் தண்ணீரை தேக்கி வைத்து, அதனை குடிநீராகவும், மற்ற உபயோகத்திற்கும் பயன்படுத்தி வந்தனர்.தற்போது உள்ள கால கட்டத்தில், தனியாரிடம் குடிநீரை குடம் ஒன்று ரூ.7 க்கு விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், பல்வேறு இடங்களில் போர் வெல் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோ கிக்க பல முறை முயற் சித்தும், அது உப்பு தண்ணீராகவும் குடிநீருக்கு உகந்த தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டதால், பயனளிக்காமல் போய் விட்டது.

    இது குறித்து ஊராட்சித் தலைவர் முருகன் மற்றும் கிராம பொது மக்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு குடிநீர் கேட்டு பல்வேறு மனுக்களை நேரில் சென்றும் பதிவு தபால் மூலமா கவும் கோரிக்கை மனுவை அளித்தனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ஊராட்சியின் உபரி நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் குண்டாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரையின் கீழ் பைப் லயன் அமைத்து வில்லானேந்தல் கிராமத்திற்கு முதல் முறையாக குடிநீர் வினி யோகம் வழங்கப்பட்டது.

    இதனை கிராம பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கி விழாவாக கொண்டாடினர்.

    Next Story
    ×