search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெய் தீபம்"

    • கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.
    • எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது.

    நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.

    நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட,

    குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.

    விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்.

    வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

    நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி

    அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.

    கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வணங்கிட துன்பம் அகலும், கிரகங்களின் சோதனை விலகும்.

    மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிப்பீடை, கிரக தோஷம்,

    பங்காளி பகை ஆகியவை நீங்கும்.

    வடக்கு திசையில் தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

    திருமணத்தடை, கல்வித் தடை ஆகியவை நீங்கி சர்வமங்களம் உண்டாகும்.

    தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது. அது அபசகுணம் என அஞ்சப்படுகிறது.

    கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

    கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.

    அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.

    எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது.

    நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.

    மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்

    மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

    மந்திரசித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்,

    நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

    கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது.

    மனக்கவலையையும், தொல்லைகளையும் பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணெய்யின் தீபங்கள்.

    • வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.
    • பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.

    வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.

    தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களை கொண்டு அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 தெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும்.

    இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.

    நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களை கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லா பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

    தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு ஏற்ற நைவேத்தியம்: வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும். ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பை தரும்.

    வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள். பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    இவ்விதம் ஒன்பது பௌர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும்.

    இந்த தினத்தில் அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது. சித்திரை- பரணி, ஐப்பசி- பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும்.

    ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும். தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும். 

    • அன்னை தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் பவுர்ணமி தோறும் 108 சுமங்கலிகளை கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
    • நெய் தீபம் ஏற்றுவது அனைத்து தீபங்களிலும் சால சிறந்தது.

    மஞ்சளின் மகத்துவம்

    நாகலோகத்து மங்கையர் இருவர் பெயர் சுந்தரி, சாரதை, இருவரும் சகோதரிகள். அவர்களின் திருமணம் கைகூடாத நிலையில் நாரதரின் ஆலோசனைப்படி திருவேற்காட்டுறை கருமாரியை பணிந்தனர்.

    அன்னை அவர்களுக்கு அருள்புரிந்தாள்.

    'குழந்தைகளே! ஒரு மண்டலம் சாம்பர்ப் பொய்கையில் நீராடி மஞ்சள் நீரை அருந்துங்கள்' என்றாள்.

    அவ்வாறே செய்து வந்தனர்.

    ஒரு மண்டலம் முடிகின்ற தருவாயில் சம்பு, மாலன் என்ற இரண்டு அரச குமாரர்கள் அங்கு வந்து நாக கன்னியர்களை கண்டனர்.

    மனங்கள் இணைந்தன.

    அன்னையின் அருளால் திருமணம் கூடியது.

    இன்றளவும் மணம் கைகூடாத கன்னியர்களின் கவலை தீர்த்து அவர்களுக்கு இல்லற வாழ்வை வழங்குகிறாள் தாய்!

    திருவிளக்கில் விளங்கும் தேவி கருமாரி

    அன்னை கருமாரியின் அம்சங்களில் ஒன்று திருவிளக்கு. மங்கல விளக்கை ஏற்றி மனதார பணிந்தால் மங்கலம் சூழும்.

    விளக்கை சுத்தமாக துடைத்து திரியிட்டு எண்ணெயிட்டு மலர் சூட்டி திலகம் வைத்து அதன் முன்னே பணிய வேண்டும்.

    விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே

    சோதி மணிவிளக்கே சீதேவி பொன்மணியே

    அந்தி விளக்கே அலங்கார நாயகியே

    காந்தி விளக்கே காமாட்சி தாயாரே!

    என்று மனமுருகிப் பாடினால் நினைத்த காரியம் கைக்கூடும். வெற்றிமேல் வெற்றி கிட்டும்.

    பக்தர்கள் திருவிளக்கு பூஜை முறை குறிப்புகள்

    இதை உணர்த்தும் வண்ணம் நமது அன்னை தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் பவுர்ணமி தோறும் 108 சுமங்கலிகளை கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

    அப்பூஜையில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்வோர் அன்னையின் அருள் பெற்று வாழ்வில் உயர்வர்.

    தேவியின் அம்சம் திருவிளக்கு என்று முன்பு கூறினோம். அந்த அம்சம் அனைத்து தீபங்களிலும் உள்ளுறையாக பொதிந்து கிடக்கிறது. எனவே அன்னையின் அம்சமாகிய திருவிளக்கையும் அது தாங்கும் தீபத்தையும் பற்றி சற்று விரிவாக காண்போம்.

    தீப முறைகளும், அதன் நன்மைகளும்

    நெய் தீபம் ஏற்றுவது அனைத்து தீபங்களிலும் சால சிறந்தது. நெய் தீபம் ஏற்றி பரம்பொருளை துதித்தால் சகல சவுபாக்கியங்களும் கிட்டி வீட்டில் நன்மை வந்து சேரும்.

    விளக்கெண்ணெய் தீபம் தேக நலன் தரும். புகழ் வழங்கும். நல்ல நட்பு வாய்க்க பெறும். ஆரோக்கிய உணவு கிடைக்கும். சுகம் வரும். சுற்றத்தாரும் சுகமடைவர். அனைத்திற்கும் மேலாக இல்லற இன்பம் கிட்டும்.

    எக்காரணத்தை முன்னிட்டும் கடலை எண்ணெயில் தீபமிடக்கூடாது.

    வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்றிடின் சகல சுகங்களும் சித்திக்கும். நன்மை வந்து சேரும்.

    நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து தீபமிட்டு ஒரு மண்டலம் எம்பிராட்டியை எண்ணி பூஜை செய்தால் அம்பிகையின் அருள் கிடைப்பது திண்ணம். சகல சவுபாக்கியங்களும் தானாய் வரும். ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

    பொதுவாக பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடப்படும் விடியற்காலை நேரம் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபமேற்றி வழிபடுதல் சிறப்பானதாகும். அவ்வாறு செய்தால் அனைத்து நலன்களும் அடைய பெற்று மண்ணில் வாழ்வாங்கு வாழ்வர்.

    • தீபாவளி என்பது அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய பண்டிகை.
    • சூரியன் மறையும் வேளையில் புத்தம் புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலம் தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.

    நரக உபாதைகளிலிருந்தும் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட வேண்டும் என்று எண்ணுபவர்கள், நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும் என்கிறது பாத்ம புராணம்.

    இதன்படி தீபாவளிப் பண்டிகை தினத்தன்று அதிகாலை (சுமார் 4.30 மணிக்கு முன்பாக) அனைவரும் உடல் முழுவதும் சுத்தமான நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். காலை எழுந்திருந்து பல் தேய்த்து விட்டு, சாமி சன்னதியில் கோலம் போட்ட ஆஸனத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு, பாட்டி, தாயார், மாமியார், அக்கா முதலிய வயதான சுமங்கலிப் பெண்கள் மூலம் தலையில் நன்கு காய்ச்சிய நல்லெண்ணெய் வைக்கச் சொல்லி, உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு நாயுருவிக் கொடியால் தலையை மூன்று தடவை சுற்றி வாசலில் எறிந்துவிட்டு, இலைகள் போட்டு கொதிக்க வைக்கப்பட்ட வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

    அதன் பிறகு பெரியோர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து தரச்சொல்லி அவர்களை வணங்கி புதிய ஆடைகள் (ஆடைகள்) பெற்றுக் கொண்டு, அவற்றை உடுத்திக்கொண்டு, விபூதி குங்குமம் நெற்றியில் இட்டுக்கொண்டு, சிறிதளவு பட்டாசு கொளுத்த வேண்டும்.

    இடையிடையே இனிப்புகள் சாப்பிட்டு, உறவினர்களின் ஆசிபெற்று அனைவருடனும் ஒன்று சேர்ந்து பூஜைகள் செய்தல் வேண்டும். நாளை நேரம் கிடைக்கும்போது ஆலயம் சென்று வர வேண்டும். மதியம் சாப்பிட்டு விட்டு மாலையில் மகாலட்சுமி பூஜை செய்து, தீபங்கள் வரிசை வரிசையாக நிறைய ஏற்றி வைத்தல் வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    தீபாவளி என்பது அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய பண்டிகை. இதை சாஸ்திரப்படி அனுஷ்டித்தால் இந்த சந்தோஷம் வருஷம் முழுவதும் நீடிக்கும்.

    தீபாவளி நாளுக்கு சாஸ்திரங்களில் தரித்ரத்தைப் போக்கடிக்கும் நாள் என்று பெயர். அதாவது சாஸ்திரத்தில் நாயுருவிக்கொடிக்கு ஏழ்மையைப் போக்கடிக்கும் சக்தியும், விரோதிகளை விலக்கும் சக்தியும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    நாயுருவிக் கொடி அல்லது தும்பீம் எனப்படும் சுரைக்காய் கொடியை, நீராடல் செய்யும்போது தலையை மூன்று முறை சுற்றி தூக்கி எறிய வேண்டும். இதனால் நரக பயமும், நரகத்துக்கு நிகரான துக்கமும், நம்மை விட்டு விலகும்.

    யம தர்ப்பணம்

    தீபாவளியன்று யமதர்மராஜாவுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தீபாவளியன்று காலை புனித நீராடல் செய்து முடித்து விட்டு காலை 7 மணிக்குள் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஆஸ்வயுஜ கிருஷ்ண சதுர்தசீ புண்ய காலே யம தர்ப்பணம் கரிஷ்யே என்று ஆரம்பிக்கும் 14 நாமாக்களைச் சொல்லி மஞ்சள் கலந்த அட்சதையால் தண்ணீர் விட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். பித்ருதர்ப்பணம் போல் எள்ளு சேர்த்தல், தந்தை இருப்பவர்கள் தந்தை இல்லாதவர்கள் அனைவருமே இதைச் செய்ய வேண்டும்.

    மாலை தீபம் ஏற்றுங்கள்

    தீபாவளியன்று மாலை உங்கள் வீட்டிலும் அருகிலுள்ள சிவன், விஷ்ணு அம்பிகை ஆலயங்களிலும் நான்கு திரியுள்ள எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். சதுர்தசியில் நான்கு திரியுடன் கூடிய தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். ஆகவே பாவங்களை போக்கடித்து நரக பயத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்று சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இதனால் நரக பயம் வராது. எப்போதும் சந்தோஷமாக இருப்பீர்கள்.

    மகாலட்சுமி பூஜை

    சூரியன் மறையும் வேளையில் புத்தம் புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலம் தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். நெய் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்ய வேண்டும். மேலும் கணக்கு எழுதப்பயன்படுத்தப்படும் பேனா பென்சில் முதலியவற்றையும் ஓர் தாம்பாளத்தில் வைத்து அவற்றில் காளியையும், அத்துடன் கணக்குகள் எழுதப்பயன்படுத்தப்படும் நோட்டுகளில் சரஸ்வதி தேவியையும் ஆவாஹனம் செய்து இந்திரனையும், குபேரனையும் பூஜை செய்ய வேண்டும். சர்க்கரைப் பொங்கல், பால் நிவேதனம் செய்து சாப்பிட வேண்டும்.

    • மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள் பாலிக்கிறார்.
    • முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை

    செவ்வாய் கிரகத்திற்குரிய அதிதேவதை முருகன். பிரபலமான செவ்வாய் தலங்களாக வைத்தீஸ்வரன். கோவிலும், பழனியும் கருதப்படுகின்றன.

    வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமி சன்னதிக்கும், பழனி தண்டாயுதபாணி சன்னதிக்கும் சென்று வந்தால் மன ஆறுதல் கிடைப்பதுடன் செவ்வாய் தோஷத்தால் தடைபடும் திருமணங்கள் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

    இது தவிர மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள் பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை.

    செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள சிவன் கோவில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம்.

    இவ்வாறு தொடர்ந்து (ஒவ்வொரு செவ்வாய் கிழமை) விரதமிருந்து நெய் தீபம் ஏற்றி வந்தால் திருமணம் தடைபடும் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

    ×