search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவறை குழாய்"

    • குழாயின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த நாய்க்குட்டி கழிவறையின் உள்பகுதிக்குள் மாட்டி கொண்டது.
    • கழிப்பறையை முழுமையாக இடித்து துளையிட்டுப் பார்த்தபோது சுமார் 8 அடி ஆழத்தில் நாய்க்குட்டி மாட்டிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    கடலூர் சாவடி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள கழிப்பறை அருகே நாய் ஒன்று 3 குட்டிகளை போட்டிருந்தது.

    அதில் ஒரு குட்டி வீட்டு கழிவறை குழாய் அருகே விளையாடிக்கொண்டிருந்தது. கழிவறை குழாயின் ஒரு பகுதி உடைந்திருந்தது குழாயின் மேல் பகுதி வழியாக சென்ற நாய்க்குட்டி கால் வழுக்கி ஓட்டைக்குள் விழுந்தது.

    குழாயின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த நாய்க்குட்டி கழிவறையின் உள்பகுதிக்குள் மாட்டி கொண்டது. அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்தது.

    குழாய்க்குள் இருந்து வந்த நாய்க்குட்டியின் முனகல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த முருகன் விலங்கு நல ஆர்வலரான செல்லா என்பவருக்கு தகவல் தெரிவித்து அவரது உதவியை நாடினார்.

    அங்கு சென்றார் விலங்கு நல ஆர்வலர் செல்லா. குழாயில் சிக்கிய நாய்க்குட்டியை கழிப்பறை ஓட்டை வழியாக வெளியே எடுக்க முயற்சித்தார். அது பலன் அளிக்கவில்லை. கழிப்பறையை உடைத்தால் தான் குட்டியை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் முருகன் கழிப்பறையை முழுமையாக உடைக்க முடிவு செய்தார். இதையடுத்து கழிப்பறையை முழுமையாக இடித்து துளையிட்டுப் பார்த்தபோது சுமார் 8 அடி ஆழத்தில் நாய்க்குட்டி மாட்டிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.

    சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நாய்க்குட்டியை உயிருடன் மீட்டனர்.

    பின்னர் அந்த நாய்க்குட்டியை குளிப்பாட்டி சுத்தம் செய்தனர். 6 மணி நேரத்திற்கு மேலாக குழாயில் சிக்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டி வெளியே வந்ததும் தனது தாயின் அரவணைப்பை தேடி அழுதுகொண்டே வேகமாக ஓடி தனது தாயுடன் சேர்ந்து பால் குடித்தது.

    இதுகுறித்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விலங்கு நல ஆர்வலர் செல்லா மற்றும் வீட்டு உரிமையாளர் முருகனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    ×