என் மலர்
நீங்கள் தேடியது "வாகனம் பழுது"
- விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லப்பட்டது.
- இரண்டு லாரிகளையும் சித்த மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் இருந்து ரூ.535 கோடி பணத்துடன் சென்ற லாரி பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து 2 கண்டெய்னர் லாரிகளில் பணத்தை ஏற்றிக்கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்டபோது தாம்பரம் அருகே ஒரு லாரி பழுதானது.
இதனால் இரண்டு லாரிகளையும் சித்த மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்தனர். பணத்துடன் நிற்கும் லாரிகளுக்கு, தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- ஓட்டுநர் வாகனத்தை சரி செய்ய முயன்றார்.
- போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட சிறையில் இருந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாநகர போலீசார் வாகனத்தில் இன்று அழைத்து சென்றனர். திருப்பூர் - பல்லடம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாகனம் பழுதடைந்து நின்றது.
இதனைத்தொடர்ந்து ஓட்டுநர் வாகனத்தை சரி செய்ய முயன்றார். இருப்பினும் வாகனம் சரியாகாத காரணத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் வாகனத்தில் இருந்ததால் போலீசார் வேனை சுற்றிலும் பாதுகாப்புக்கு நின்றனர்.
மேலும் அவ்வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.