என் மலர்
நீங்கள் தேடியது "நல்ல கண்ணு"
- நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்துள்ள திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.
- இப்படம் வருகிற 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தைப் பார்த்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பேசியதாவது, யாதும் ஊரே என்பது நம்முடைய தமிழ் இலக்கியத்தில் முதல் வரி. இன்று உலகத்தில் ஐக்கிய நாட்டு சபையில் 'யாதும் ஊரே' என்று தான் போடப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாட்டு சபையில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது தமிழுக்குரிய பெருமையை தமிழ் இலக்கியத்திற்குரிய பெருமையை அடையாளம் காட்டியிருக்கிறது. இந்த மகிழ்ச்சியிலேயே படத்தை பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

விஜய் சேதுபதியும் படக்குழுவினரும் நல்ல முயற்சி எடுத்திருக்கிறார்கள். இந்திய நாட்டில் உள்ள சமூகங்கள் மாறிக் கிடக்கிறது. இன்று இலங்கையில் உள்ள பிரச்சினையை தமிழ் நாட்டில் பேசுகிறார்கள். அதுபோல் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினையை வெளி உலகத்தில் பேசுகிறார்கள். இப்படி பிரண்டு கிடக்கும் ஒரு சமூகத்தை ஒரு இசையிலோ அல்லது கருத்தால் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கிய படம் என்ற முறையில் இப்படத்தை பாராட்டுகிறேன் என்று பேசினார்.