search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்வெளியில் திருமணம்"

    • 1 லட்சம் அடி உயரத்திற்கு சென்றதும், விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளலாம்.
    • விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள ஏற்கனவே ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    திருமணம் செய்யும் பாரம்பரியம் தற்போது பல எல்லைகளை கடந்துவிட்டது. திருமணம் செய்து கொள்ளும் இடத்தில் துவங்கி, ஆடை, அணிகலன், உணவு என்று எல்லாவற்றுக்குமே ஏராளமான ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. வித்தியாசமான இடங்களில் திருமணம் செய்து கொள்வது, இயற்கை அழகியல் நிறைந்த பகுதியில் மாலை மாற்றிக் கொள்வது போன்ற சம்பவங்கள் தற்போதைய டிரெண்ட் ஆக இருக்கின்றன.

    இந்த வரிசையில், யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளும் வசதியை தனியார் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. அந்த வகையில் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள நபர் ஒருவருக்கு ரூ. 1 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்று அழைக்கப்படும் புதிய நிறுவனம் திருணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகளை கார்பன் நியூட்ரல் பலூன் ஒன்றில் விண்வெளிக்கு அனுப்புகிறது. இந்த ராட்சத பலூனில் ஏராளமான ஜன்னல்கள் உள்ளன. பூமியில் இருந்து கிளம்பும் ஜோடி, சரியாக 1 லட்சம் அடி உயரத்திற்கு சென்றதும், விண்வெளியில் இருந்தபடி பூமியின் அழகை கண்டுகளித்துக் கொண்டே திருமணம் செய்து கொள்ளலாம்.

    திருமணம் முடிந்ததும் திருமண தம்பதிகளாக அவர்கள் மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்படுவர். இந்த முறையில் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள ஏற்கனவே ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற திருமண சேவையை, அடுத்த ஆண்டில் இருந்து துவங்கி வைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    ×