என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமீர் வர்மா"
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
- காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாய், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் உலக பேட்மிண்டன் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரனாய், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 19-21, 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் பிரனாய் ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மா, சீன தைபே வீரரான சி.ஒய். லின் உடன் மோதினர். இந்த ஆட்டத்தில் 12-21, 13-21 என்ற கணக்கில் சமீர் தோல்வியடைந்தார்.
- இந்தியாவின் பிரனோய் மற்றும் பிரேசில் வீரரான மிஷா ஜில்பர்மேனுடன் மோதினார்.
- இந்தியாவின் சமீர் வர்மா, சிங்கப்பூர் வீரரான லோ கீன் யூவுடன் மோதினர்.
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றைய பிரிவு ஆட்டத்தில் உலக பேட்மிண்டன் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரனோய், 53-வது தரவரிசையில் உள்ள பிரேசில் வீரரான மிஷா ஜில்பர்மேனுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனோய் 21-17, 21-15 என்ற கணக்கில் மிஷா ஜில்பர்மேன்னை வீழ்த்தினார். இந்த போட்டி 46 நிமிடம் நடைபெற்றது. இதன் மூலம் அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 114-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சமீர் வர்மாவும் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள சிங்கப்பூர் வீரரான லோ கீன் யூவும் மோதினர்.
இதில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-14, 14-21, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த போட்டி 62 நிமிடம் நடைபெற்றது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி ஜோடி, வெள்ளிப் பதக்கம் வென்றது.
- இவர்களின் சாதனை நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன.
புதுடெல்லி:
ஸ்லோவேனியாவின் மரிபோர் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா தங்கம் வென்று அசத்தி உள்ளார். இவர், ஆடவர் ஒற்யைர் இறுதிப்போட்டியில் தைவான் வீரர் சூ லீ யாங்கை 21-18 21-14 என்ற நேர்செட்களில் வென்றார்.
இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி ஜோடி, வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்த ஜோடி அரையிறுதியில் டென்மார்க் ஜோடியை 21-15 21-19 என்ற செட்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் இறுதிப்போட்டியில் டென்மார்க்கின் மற்றொரு ஜோடியிடம் 12-21 13-21 என தோல்வியடைந்தது.
இந்திய பேட்மிண்டனின் தொடர் வளர்ச்சி மற்றும் வெற்றியை இந்த வீரர்களின் சாதனைகள் பிரதிபலிக்கின்றன. அத்துடன், நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்