search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ. 2000 நோட்டு"

    • பொது மக்களுக்கு சிரமம் இன்றி ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொடுக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்.
    • செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மக்கள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.

    இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக் கிழமை அறிவித்து இருந்தது. அதன்படி பொது மக்கள் வைத்திருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை இன்று (மே 23) முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பொது மக்களுக்கு சிரமம் இன்றி ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது.

    செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மக்கள் வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும். எனினும், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அந்த வகையில், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றும் போது, பொது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    வங்கிகளுக்கு அவசர கதியில் செல்ல வேண்டாம். அவசரம் இன்றி, நிதானமாக ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரே சமயத்தில் மக்கள் அதிகபட்சம் பத்து ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.

    ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் தொடர்ந்து சட்டப்பூர்வ பண பரிமாற்றத்திற்கு உகந்தது. இதன் காரணமாக மக்கள் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வர்த்தக தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரே சமயத்தில் பத்து ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் பணத்தை வங்கி அக்கவுண்டில் செலுத்தும் போது எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. எதற்கும் இவ்வாறு செய்யும் முன் KYC விதிமுறைகளை அறிந்து கொள்வது நல்லது.

    ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைந்த தொகையை வங்கி கணக்கில் செலுத்தும் போது எவ்வித ஆவணங்களும் தேவைப்படாது. ஆனால், ரூ. 50 ஆயிரத்திற்கும் அதிக தொகையை செலுத்தும் போது உங்ளின் PAN எண்ணை வழங்குவது அவசியம் ஆகும்.

    ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள பயனர்கள் எந்த விதமான செல்லான்களையும் வங்கியில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ரூ. 20 ஆயிரம் வரையிலான தொகையை மாற்றிக் கொள்ள பொது மக்கள் செல்லான் எதுவும் பூர்த்தி செய்து வழங்க வேண்டாம்.

    வழக்கமான முறையிலேயே வங்கிகள் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. பொது மக்களுக்கு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றும் நடைமுறை எளிமையாக இருக்க வேண்டும் என்றும் வங்கிகள், பொது மக்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

    இந்தியாவில் ரொக்க பரிமாற்றத்தில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் 10.8 சதவீதமாகவே இருந்து வந்தது. இதன் காரணமாக ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறுவதால், பொருளாதாரத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படாது. பெரும்பாலான ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் திரும்ப பெறப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

    வங்கிகளிடம் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றுவோருக்கு வழங்க போதுமான அளவு ரூபாய் நோட்டுக்கள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன. வெளிநாட்டில் வசிப்போருக்கு இந்த விஷயத்தில் சிறப்பு விதி விலக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. எனினும், "மக்களின் கடின சூழலுக்கும் தீர்வு அளிக்க வேண்டியது எங்கள் கடமை, ஒட்டுமொத்த வழிமுறையையும் எளிமையாக நிறைவு செய்ய நினைக்கிறோம்," என்ற ரிசர்வ வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

    ×