search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரே நேர்கோடு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் கிரகங்கள் வரிசை கட்டி நிற்கும் அதிசய நிகழ்வு அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
    • இன்று இரவு சந்திரன், வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு வானில் தோன்றுகிறது.

    சென்னை:

    நவகிரகங்களில் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், புதன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களை வானில் பார்க்க முடியும். சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலையில் விடிவெள்ளி தென்படும்.

    மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சந்திரன், வியாழன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களை கண்களால் பார்க்க முடியும்.

    சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் கிரகங்கள் வரிசை கட்டி நிற்கும் அதிசய நிகழ்வு அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு சந்திரன், வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு வானில் தோன்றுகிறது.

    இதனை தொலைநோக்கிகள் போன்ற உபகரணங்களை கொண்டு பார்க்க முடியும். கிண்டியில் உள்ள ஸ்பேஸ் ஆர்கேடில் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு தொலைநோக்கிகள் மூலம் வானில் தோன்றும் கிரகங்களின் இணைப்பு நிகழ்வை பார்க்க முடியும் என அதன் தலைமை செயல் அதிகாரி நீரஜ்லடியா கூறினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், முன்பு விண்வெளி ஆய்வு ஒரு முக்கிய பொழுது போக்காக இருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொருவரும் நமது சூரிய குடும்பத்தை பற்றி மேலும் அறியவும், தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர் என்றார்.

    இன்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை 3 கிரகங்கள் நேர்கோட்டில் சந்திப்பதை தொலைநோக்கிகள் மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ×