search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேப்ப எண்ணெய்"

    • பொடுகு மருத்துவ ரீதியாக செபோரியா என்று அழைக்கப்படுகிறது.
    • எளிய பொருட்களை வைத்தே பொடுகை எளிதாக விரட்டி விடலாம்.

    பொடுகு வெளியே வெள்ளைநிறத்தில் உதிரும் வகை , மற்றொன்று மண்டைப்பகுதியில் மெழுகு மாதிரி படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியா வகை என இரண்டு வகை உண்டு. இவற்றில் உங்களுக்கு எந்தவிதமான பொடுகு என்றாலும் அதில் இருந்து நிவாரணம் பெற எளிய சிகிச்சை ஒன்று உள்ளது.

    பொடுகு மருத்துவ ரீதியாக செபோரியா என்று அழைக்கப்படுகிறது. இதை எப்படி போக்கலாம் என தெரியாமல் பலரும் குழம்புகிறார்கள். பொடுகின் முதல்கட்டமாக இருந்தால் நீங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்தே அதை எளிதாக விரட்டி விடலாம்.

    அதற்கு வேப்பிலை, வேப்ப எண்ணெய், வேப்பம்பூ, எலுமிச்சை போன்றவற்றை பயன்படுத்தி எளிமையான முறையில் பொடுகு பிரச்சனையில் இருந்து வெளியில் வர முடியும்.

    முதலில் வேப்ப இலைகளை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் மாதிரி செய்து உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து பின்னர் கழுவினால் பொடுகு நீங்கிவிடும்.

    இதேபோல் வேப்பம் பூவை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து அந்த விழுதையும் தலையில் தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகுத்தொல்லை தீரும்.

    இந்த முறைகளை வாரத்துக்கு ஒரு தடவை செய்யலாம். இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. 

    • அம்மனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் நீலநிறச் சேலைகளை அணியக் கூடாது.
    • சிவப்புச் சேலையை சனிக்கிழமை தவிர மற்ற அனைத்துக் கிழமைகளிலும் அணியலாம்.

    தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    மஞ்சள் நிறச் சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.

    நீல நிறச் சேலை அணிந்தும் தீபமிடலாம்.

    அம்மனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் நீலநிறச் சேலைகளை அணியக் கூடாது. மற்ற நாட்களில் நீலநிறச் சேலை அணிந்தால் நோய்கள் குணமாகும். பேய், பிசாசுத் தொல்லைகள் நீங்கும்.

    சிவப்புச் சேலையை சனிக்கிழமை தவிர மற்ற அனைத்துக் கிழமைகளிலும் அணியலாம். சிவப்புச் சேலை அணிவதால் திருமணத் தடை நீங்கி இல்லறச் சுகம் கிட்டும். மலட்டுத் தன்மை அடியோடு ஒழியும். போய், பிசாசு தொல்லைகள் விலகும். செய்வினை அழியும்.

    வெள்ளைச் சேலையைச் சுமங்கலிப் பெண்கள் தவிர மற்றவர்கள் அணியலாம். வெள்ளைச் சேலை புதியதாகவும், சுத்தமானதாகவும் இருத்தல் வேண்டும். வெள்ளைச் சேலை அணிந்தால் உத்தமமான பலன்கள் வாழ்வில் உண்டாகும்.

    திருவிளக்கும், தீபமும் அன்னையின் அம்சங்கள் என்றாலும் அனைத்தும் தெய்வங்களையும் திருவிளக்கிட்டு தீபமேற்றியே நாம் காலம் காலமாய் வழிபட்டு வருகின்றோம். அவ்வாறு வழிபடுகையில் இன்னின்ன தெய்வங்களுக்கு இன்னின்ன தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறியுள்ளனர்.

    தேவி கருமாரியை நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் என ஐந்து எண்ணெய் கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும்.

    ×