என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசுமுறை பயணம்"
- புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
- உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மாஸ்கோ:
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று சீனாவுக்கு சென்றார். சீன அதிபர் ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். 5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
அவர் இன்று சீன தலைநகர் பீஜிங்குக்கு சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதின், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நீடித்து கொண்டிருக்கும் நிலையில் புதினின் சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீன பயணத்துக்கு முன்பு புதின், சீன ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறும்போது, நாங்கள் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.
இந்த மோதலுக்கு அமைதியான வழிகளில் விரிவான, நிலையான மற்றும் நியாயமான தீர்வை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அத்தகைய பேச்சுவார்த்தைகள் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளின் நலன்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண ஆஸ்திரேலிய பிரதமர், அந்நாட்டு ரசிகர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
- டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரசுமுறை பயணமாக ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்யும் வகையில், பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் முக்கிய தாதுக்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்டவைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்கான வாய்ப்பு பற்றி பேசினர்.
மேலும் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை (50 ஓவர்கள்) காண ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் அந்நாட்டு ரசிகர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். முன்னதாக ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா என மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்