என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எழும்பூர் நீதிமன்றம்"
- எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.
- அந்த ஜாமின் நிபந்தனைளை தளர்த்தக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி மனுதாக்கல் செய்துள்ளார்.
பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இதனால் நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் தலைமறைவானார். ஐதராபாத்தில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அதன்பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த ஜாமின் நிபந்தனைளை தளர்த்தக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி மனுதாக்கல் செய்துள்ளார்.
- தனி 'நெட்வொர்க்' அமைத்து 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பவுடர் விற்பனை நடைபெற்று இருக்கிறது.
- 'வாட்ஸ் அப்' மூலம் குழு அமைத்து சினிமா கலைஞர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் 7-வது நுழைவுவாயில் 5 கிராம் 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பவுடருடன் நின்றுக்கொண்டிருந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், சின்னத்திரை துணை நடிகை எஸ்தர் என்கிற மீனா (வயது 28) என்பது தெரிய வந்தது.
தனி 'நெட்வொர்க்' அமைத்து 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பவுடர் விற்பனை நடைபெற்று இருக்கிறது. 'வாட்ஸ் அப்' மூலம் குழு அமைத்து சினிமா கலைஞர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். துணை நடிகை மீனாவுக்கு 15-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்கும்படி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
- வினோஜ் வரும் ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கில் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஜூன் 6ம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்பியும், மத்திய சென்னை திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொகுதி மேம்பாட்டு நிதியில் தயாநிதி மாறன் எதுவும் பயன்படுத்தவில்லை என வினோஜ் பி.செல்வம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
கடந்த மாதம் ஏப்ரல் 13ம் தேதி, வினோஜ் பி.செல்வம் சமூக வலைளத்தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வினோஜ் பி.செல்வம் கருத்து பதவிட்டதாக தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், வினோஜ் வரும் ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் கிருஷ்ணசாமி புகார் அளித்தார்.
- புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் கிருஷ்ணசாமி பதிவேற்றம் செய்தார்.
சென்னை:
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை.
இதுபோன்ற முறைகேடுகளால், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்தார்.
மேலும் புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளார்.
இவ்வாறு தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை ஆதாரம் இல்லாமல் சுமத்தியுள்ளதாக கிருஷ்ணசாமிக்கு எதிராக சென்னை எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்