என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டாஸ்மாக் பார்கள்"
- புதிதாக டெண்டர் கோரி பார்களை ஏலத்தில் விட டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
- சென்னையில் பார்கள் மூடிக் கிடப்பதால் தெருவோரங்களில் நின்று மது குடிப்பது தொடர்கதையாகி வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவது தொடர்பாக கடந்த ஓராண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் பார்கள் செயல்படும் கட்டிட உரிமையாளர்களின் தடையில்லா சான்று தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்புக்கு எதிராக பார் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் பார் ஏலத்தில் பங்கேற்க உரிமையாளர்களின் தடையில்லா சான்று தேவை இல்லை என்று இருப்பதை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை 6 மாதங்களில் மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் டாஸ்மாக் பார் ஏலம் தொடர்பான வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு 2022-ம் ஆண்டு டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டது.
இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் புதிய டெண்டர் தொடர்பான ஏல அறிவிப்பை வெளியிடும்போது கட்டிட உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கங்கா புர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு பிறப்பித்த உத்தரவில் 2022-ம் ஆண்டு டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். புதிதாக டெண்டர் கோரி பார்களை ஏலத்தில் விட டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
இதன் காரணமாக சென்னையில் கடந்த ஓராண்டாக மூடிக்கிடக்கும் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு வழி ஏற்படும் சூழல் பிறந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகளும் பார் உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பார்கள் மூடிக் கிடப்பதால் தெருவோரங்களில் நின்று மது குடிப்பது தொடர்கதையாகி வருகிறது. குடியிருப்புகள் மத்தியிலும் மதுபிரியர்கள் குடித்து வருகிறார்கள். பார்களுக்கு மீண்டும் ஏலம் விட பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவால் சென்னையில் விரைவில் பார்கள் திறக்கப்பட்டு செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக சென்னையில் ஓராண்டாக தொடரும் "சாலையோர குடி"க்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் டெண்டர் மூலம் பார்கள் நடந்து வந்தன.
- தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து அனுமதியின்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த 50 சதவீத பார்களை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை:
தஞ்சாவூர் கீழவாசலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்திய குப்புசாமி, குட்டி விவேக் என 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அனுமதியின்றி நடத்தப்படும் பார்களை உடனடியாக மூடி சீல் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்தது.
மாநிலம் முழுவதும் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. 3,200 பார்கள் உள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் டெண்டர் மூலம் பார்கள் நடந்து வந்தன.
இந்த டெண்டர் சமீபத்தில் முடிவடைந்தது. பெரும்பாலான பார் உரிமையாளர்கள் அதிக கட்டணம் இருப்பதாக கூறி மீண்டும் டெண்டர் பணம் செலுத்த வில்லை. இதனால் பல பார்கள் அனுமதியின்றி மறைமுகமாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் 214 பார்கள் சீல் வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து அனுமதியின்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த 50 சதவீத பார்களை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது பார் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன் கூறியதாவது:-
சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்கள் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. டாஸ்மாக் நிர்வாகமும் அப்பீல் செய்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் பார்களுக்கு டெண்டர் விடப்பட்டு திறக்கப்படும்.
மற்ற மாவட்டங்களில் டெண்டர் அதிக தொகை இருப்பதால் ஏராளமான பார் உரிமையாளர்கள் பணம் செலுத்தவில்லை.
பார் உரிமையாளர்களின் நிலையை பலமுறை அரசுக்கு விளக்கியுள்ளோம். நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்