என் மலர்
நீங்கள் தேடியது "கவுடா"
- புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
- இந்த விழாவில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பெங்களூரு:
தலைநகர் டெல்லியில் வரும் 28-ம் தேதி திறக்கப்படும் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று பல கட்சிகள் இதில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.
இதற்கிடையே, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவும் இந்த விழாவில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் நான் பங்கேற்கிறேன். இது நாட்டின் சொத்து. யாருடைய தனிப்பட்ட விஷயமும் அல்ல என தெரிவித்தார்.
இதேபோல தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதாதளம், சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட 7 கட்சிகளின் பிரதிநிதிகள், பா.ஜ.க. கூட்டணியை சேர்ந்த 18 கட்சிகள் என மொத்தம் 25 கட்சிகள் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
மேலும், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், நாங்கள் ஒன்றும் காங்கிரசின் அடிமை இல்லை எனவும், பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்பது எங்கள் கட்சியின் முடிவு என மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் ஒன்றும் காங்கிரசுக்கு அடிமை இல்லை. புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்பது கட்சியின் சொந்த முடிவு. நாங்கள் காங்கிரசை ஏன் பின்தொடர வேண்டும் என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.