என் மலர்
நீங்கள் தேடியது "புரோ ஹாக்கி லீக்"
- முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
- இதே மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
லண்டன்:
9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஹாக்கி லீக் போட்டி தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐரோப்பிய சுற்று ஆட்டம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.
இந்த சுற்றில் முதலாவது ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியான பெல்ஜியம், தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்தியாவை எதிர்கொண்டது. இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்தன. 17-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி அந்த அணி வீரர் திபாயு ஸ்டாக்புரோக்ஸ் பந்தை கோல் வலைக்குள் திணித்தார்.
21-வது நிமிடத்தில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மன்தீப் சிங் கோல் திருப்பினார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
இதைத்தொடர்ந்து பெல்ஜியம் அணியினர் அடிக்கடி இந்திய அணியின் கோல் எல்லையை நோக்கி படையெடுத்து கடும் குடைச்சல் கொடுத்தனர். இதன் பலனாக அந்த அணிக்கு பல பெனால்டி கார்னர் வாய்ப்பு கிட்டியது. இதனை கோலாக்க அவர்கள் எடுத்த முயற்சியை இந்திய அணியின் பின்கள வீரர்கள் மற்றும் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் அபாரமாக தடுத்து முறியடித்தனர்.
கடைசி 2 நிமிடம் இருக்கையில் பெல்ஜியம் அணியின் எல்லா வீரர்களும் இந்திய அணியின் கோல் எல்லைப்பகுதியை சுற்றி வளைத்து நெருக்கினர். அந்த சமயத்தில் பெல்ஜியம் வீரர் அடித்த பந்தை இந்திய வீரர் ஜர்மன்பிரீத் சிங் மட்டையின் பின்பகுதியை வைத்து தடுத்ததாக நடுவரிடம் அப்பீல் செய்தனர். இதனை ஆய்வு செய்த நடுவர் பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கார்னர் (59-வது நிமிடம்) வாய்ப்பை வழங்கினார். இதனை கச்சிதமாக பயன்படுத்தி அந்த அணியின் நெல்சன் ஒனானா கோலடித்தார். அதுவே வெற்றியை தீர்மானிக்கும் கோலாக அமைந்தது.
முடிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது. 9-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். 5-வது ஆட்டத்தில் ஆடிய பெல்ஜியம் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். இதே மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- 19-வது நிமிடத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி ஒரு கோல் அடித்தார்.
- 45-வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆஷ்லி செஸ்சா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் 5-வது சீசன் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி ஒரு கோல் அடித்தார். இதற்கு 45-வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆஷ்லி செஸ்சா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.
கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. இதனையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க 'பெனால்டி ஷூட் அவுட்' முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் தீபிகா குமாரி, லால்ரெம்சியாமி கைகொடுக்க இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய பெண்கள் அணி, இதுவரை விளையாடிய 8 போட்டியில், 3 வெற்றி, 5 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது....
- இந்திய அணி முதல் பாதி ஆட்டத்தில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து அசத்தியது.
- இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
புவனேஸ்வர்:
9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஹாக்கி லீக் தொடரின் 2-வது கட்ட போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய இந்திய அணி முதல் பாதி ஆட்டத்தில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து அசத்தியது. இதையடுத்து 2-0 என இந்திய அணி முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து 3வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்து 3-0 என முன்னிலை பெற்றது. 4-வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இறுதிவரை அயர்லாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் நீலகண்ட சர்மா, ஆகாஷ்தீப் சிங், குர்ஜந்த் சிங் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.
- ஸ்பெயினிடம் 1-3 என்ற கணக்கில் முந்தைய நாளில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
- அதற்கு சுடச்சுட இந்திய அணி பதிலடி கொடுத்து விட்டது.
புவனேஷ்வர்:
6-வது புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்பெயினை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த இந்திய வீரர்களால் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை.
பிற்பாதியில் தாக்குதல் பாணியை தீவிரப்படுத்திய இந்திய அணிக்கு 32-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் கிடைத்தது. அதை பயன்படுத்தி மன்தீப் சிங் கோல் அடித்தார். 39-வது நிமிடத்தில் மற்றொரு இந்திய வீரர் தில்பிரீத் கோல் போட்டு முன்னிலையை வலுப்படுத்தினார்.
முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்தது. முந்தைய நாள் இதே ஸ்பெயினிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவிய இந்திய அணி, அதற்கு சுடச்சுட பதிலடி கொடுத்து விட்டது. இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை நாளை சந்திக்கிறது.
இதன் பெண்கள் பிரிவில் இந்திய அணி, இங்கிலாந்துடன் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இந்திய தரப்பில் நவ்னீத் கவுர், ருதஜா ததாசோ பிசல் கோல் அடித்தனர்.
இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஷூட்-அவுட் விதி கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது. இந்திய பெண்கள் அணி அடுத்த ஆட்டத்தில் ஸ்பெயினுடன் நாளை மல்லுக்கட்டுகிறது.
- இந்திய ஆடவர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.
- பெண்கள் பிரிவில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது.
புவனேஸ்வர்:
6-வது புரோ ஹாக்கி லீக் தொடரில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி முந்தைய நாள் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது. இந்திய அணி சார்பில் குர்ஜத் சிங் கோல் அடித்தார். நாளை நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை சந்திக்கிறது.
புரோ ஹாக்கி லீக் தொடரில் பெண்கள் பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது.