என் மலர்
நீங்கள் தேடியது "கோச்"
- சென்னையில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் பல்லேடியம் அரங்கில் நியூயார்க் ‘கோச்’ பிராண்டின் புதிய டேபி (Tabby) கைப்பைகள் அறிமுக விழா நடைபெற்றது.
- இதில் நடிகைகள் ஜனனி, பார்வதி நாயர், யாஷிகா ஆனந்த், சம்யுக்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் பல்லேடியம் அரங்கில் புகழ் பெற்ற நியூயார்க் 'கோச்' பிராண்டின் புதிய டேபி (Tabby) கைப்பைகள் அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரை நட்சத்திரங்கள் ஜனனி, பார்வதி நாயர், யாஷிகா ஆனந்த், சம்யுக்தா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பிற துறையைச் சேர்ந்த பிரபலங்கள் என ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

புகழ்பெற்ற ஆடம்பர பிராண்டான 'கோச் நியூயார்க்' என்பது கோச் என அழைக்கப்படுகிறது. அதன் அதிநவீன லெதர் கைப்பைகள், சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்கள் என அனைத்தும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவையாகும். அமெரிக்க பிரீமியம் ரக பிராண்டான இதன் பொருட்கள் கடந்த பல ஆண்டுகளாக பலரின் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
பல்லேடியத்தில் மே 27–ந்தேதி மாலை நடந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் இறுதி வரை 'கோச்' பிராண்டின் அதி-ஆடம்பரத்தின் மிக உயர்ந்த பொருட்கள் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இதன் பிரத்யேக லெதர் டெபி கைப்பைகளின் புதிய தொகுப்பை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் முழுமையாக ரசித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நவநாகரீகத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த பிராண்டின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அவற்றை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.