search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர்தொழில்"

    • விக்னேஷ் ராஜாவுடன் நடிகர் தனுஷ் கூட்டணி அமைக்கப்போவதாக புதிய அப்டேட்.
    • பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

    கடந்த ஆண்டு அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் ஆகியோரின் நடிப்பில் போர் தொழில் எனும் திரைப்படம் வெளியானது.

    இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

    கிரைம் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ராட்சசன் படத்திற்கு பிறகு பெரிய அளவில் பேசப்பட்டது. அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீண்டும் அசோக் செல்வன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்பட்டது. மேலும் படம் தொடர்பான அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

    இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவல் என்னவென்றால், விக்னேஷ் ராஜாவுடன் நடிகர் தனுஷ் கூட்டணி அமைக்கப்போவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

    இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த புதிய படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

    நடிகர் தனுஷ் தற்போது `குபேரா' படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக `தேரே இஷ்க் மெய்ன்' எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார் தனுஷ். எனவே தனுஷ் தனது முந்தைய படங்களின் கமிட்மெண்ட்களை முடித்த பின்பு போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'போர் தொழில்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இந்த வெற்றிக்காக படக்குழு செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'போர் தொழில்'. இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

    இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது. சில தினங்களுக்கு முன்பு 'போர் தொழில்' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது. 'போர் தொழில்' திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றிக்காக படக்குழு செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


    இதில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமாரிடம், "விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது" இதற்கு பதிலளித்த சரத்குமார், அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் கூறுகிறோம். விஜய் என்னோடு கூட்டணி வைக்க வேண்டும். நீங்கள் ஏன் கூட்டணி பற்றி பேசுகிறீர்கள். முதலில் விஜய் அரசியல் களத்திற்கு வரவேண்டும் அதை வரவேற்கிறோம் என்று பேசிவிட்டோம் என்று கோபமாக பேசினார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் விவாதம் செய்த சரத்குமார் வாங்க மேடையில் போய் பேசுவோம் என்று மீண்டும் மேடைக்கே சென்றுவிட்டார்.

    • நடிகர் சரத்குமார் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் 50 வயது வரை உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளேன் என்று கூறினார்.
    • அதனை 2026-ல் என்னை முதல்வராக்கினால் சொல்வேன் என்று தெரிவித்தது சமூக வலைதளத்தில் பேசு பொருளானது.

    தமிழில் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சூரியன், நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சரத்குமார். இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். நடிகராக மட்டுமல்லாது சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.

    சமீபத்தில், சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார், தற்போது எனக்கு 69 வயதாகிறது; இன்னும் 150 வயது வரை உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளேன். அதனை 2026-ல் என்னை முதல்வராக்கினால் சொல்வேன் என்று தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளத்தில் பேசு பொருளானது.


    சரத்குமார்

    இந்நிலையில், 'போர் தொழில்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "ஒரு கூட்டத்தில் பேசும்போது, சுற்றியிருப்பவர்களின் இறுக்க நிலையை தளர்வுபடுத்த வேண்டும் என்பதற்காக காமெடியாக பேசினேன். நான் சொன்னது இவ்வளவு பெரிய செய்தியாகியுள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. யாராவது 150 வயது வரை வாழ முடியுமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.

    ஒரு கட்சித் தொண்டர்களிடம், அவரது கட்சித் தலைவரை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசை எனக்கும் உள்ளது. இதை மறுக்க முடியாது. எதற்கு பொய் சொல்ல வேண்டும். நான் அதற்கு முயற்சிப்பேன். யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்" என்று கூறினார்

    ×