search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப்"

    • பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் தமன்னா, அக்‌ஷயா, நயனா, அபினய் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.
    • 3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்தியாவின் புஷ்ரா கான் வெள்ளி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தென் கொரியாவில் உள்ள யெச்சியோன் பகுதியில ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், இன்று நடந்த டெகாத்லான் பிரிவில் 7003 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதே போன்று பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் தமன்னா, அக்ஷயா, நயனா, அபினய் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.

    மற்றொரு 3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்தியாவின் புஷ்ரா கான் வெள்ளி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என தலா 12 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜப்பான் 10 தங்கம் மற்றும் 17 பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 14 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

    • ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் பாரத்ப்ரீத் சிங் 55.66 மீ எறிந்து இந்தியாவிற்கு 2-வது தங்கம் வென்றார்.
    • தென்கொரியாவில் உள்ள யெச்சியோன் பகுதியில ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

    ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் அந்திமா பால் வெண்கலம் வென்றுள்ளார்.

    தென்கொரியாவில் உள்ள யெச்சியோன் பகுதியில ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், பெண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் 53.31 வினாடிகளில் ஓடி இந்தியாவின் ஹீனா மல்லிக் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.

    இதே போன்று ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் பாரத்ப்ரீத் சிங் 55.66 மீ எறிந்து இந்தியாவிற்கு 2-வது தங்கம் வென்றார்.

    ×