என் மலர்
நீங்கள் தேடியது "அறம்"
- கோபி நயினாருக்கு எதிராக திமுக ஆதரவாளர்கள் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
- அறம் படத்திற்காக திராவிடர் கழகம் என்னை பாராட்டி தந்தை பெரியார் விருது வழங்கியது
இயக்குநர் கோபி நயினார் அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் மதிவதனி போன்றவர்கள் மக்களுக்கு பிரச்னை என்று முன் வருவதில்லை என்று விமர்சனம் செய்திருந்தார்.
திராவிடர் கழக துணைப்பொதுச் செயலாளர் மதிவதனி மீதான விமர்சனத்திற்கு பிறகு அவருக்கு ஆதரவாகவும், கோபி நயினாருக்கு எதிராகவும் திமுக ஆதரவாளர்கள் இணையத்தில் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், "அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்" என்று இயக்குநர் கோபி நயினார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தலித் மக்களுக்கு குடிமனை கேட்டும் அவர்களின் வாழ்நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரியும் போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும் கேவலமாக பொதுவெளியில் இழிவுபடுத்தப்படுகிறேன்.
தன்னை ஜனநாயக அமைப்பு என்று கூறிக்கொள்கின்ற ஒரு அமைப்பை எதிர்த்து ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பினால் சர்வாதிகார மனநிலையோடு அது என்னை எதிர்கொள்கிறது இத்தகைய சூழலில் இந்த சர்வாதிகார மனநிலை கொண்டவர்களின் மத்தியில் வாழ்வதற்கே எனக்கு அச்சமூட்டுகிறது
தமிழகம் முழுவதும் தலித் மக்களின் நிலை இது தான் என்று நம்புகிறேன் தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு திராவிட சிந்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை
இந்த சூழலில் இன்று கடுமையாக அவமதிக்கப்படுகிற நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம் இந்திய முழுக்க நடக்கின்ற அறிவுஜீவிகளின் சமூக செயற்பாடட்டாளர்கள் கலைஞர்கள் மீது நடந்த படுகொலைக்கும் எதிர்காலத்தில் எனக்கு நிகழ போகும் படுகொலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன் அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே. அதற்காக தான் திராவிடர் கழகம் என்னை பாராட்டி தந்தை பெரியார் விருது வழங்கியது
நிகழ்காலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டங்களை முன்னெடுக்கும் போது இந்த செயல் என்னை அவமானப்படுத்துகிறது. அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்திரிக்கிறது.
இது போன்ற காரணுங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன். என்றும் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் போராட்ட உணர்வோடு" என்று தெரிவித்துள்ளார்.
- நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கோபி நயினார்.
- இவர் மீது இலங்கையை சேர்ந்த சியாமளா பண மோசடி புகார் அளித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கோபி நயினார். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் அண்ட்ரியா நடிக்கும் 'மனுசி' என்ற படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில் இயக்குனர் கோபி நயினார் மீது இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் சியாமளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளித்துள்ளார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சியாமளா, "சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தமிழில் படங்களை தயாரிக்க ஆசைப்பட்டேன். கடந்த 2018ம் ஆண்டு சினிமா வட்டாரங்கள் மூலம் ஆக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜின் அறிமுகம் கிடைத்தது.

அவர் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் கருப்பர் நகரம் படத்தை தயாரித்து வருவதாகவும், அப்படத்தில் என்னை இணைந்து தயாரிப்பாளராக செயல்படுமாறும் தெரிவித்தார். அதன்பின்னர் கோபி நயினாரை நேரில் சந்தித்தோம், அவரும் விஜய் அமிர்தராஜுடன் இணைந்து படம் தயாரிக்கலாம் என கூறினார். அதன்பின்னர் அவரது வாக்குறுதியை ஏற்று, பல்வேறு தவணைகளாக மொத்தம் 30 லட்சம் ரூபாயை விஜய் அமிர்தராஜிடம் கொடுத்தேன், ஐந்து லட்சத்தை கையில் பணமாக கொடுத்தேன்.

பிறகு படப்பிடிப்பு தொடங்கியது, ஆறு மாதத்தில் படத்தை முடித்து விடலாம் எனவும் படத்தின் லாபத்தில் 25 சதவீதம் தருவதாகவும் தெரிவித்தனர். அதன்பிறகு நான் பிரான்சிற்கு சென்றுவிட்டேன், சில மாதங்கள் கழித்து விஜய் அமிர்தராஜிடம் படம் குறித்து கேட்டபோது தற்காலிகாமாக படம் நிறுத்தபட்டுவிட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நயினார் இருவரும் எனது தொடர்பை முற்றிலுமாக துண்டித்து விட்டனர், பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. எனவே விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நயினார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்" என்றார்.
- நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.
- இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
தமிழ் சினிமாவில் அறம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படத்திற்கு "மனுசி" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை வெற்றி மாறன் தயாரிக்கிறார். இயக்குநரின் முதல் படத்தை போன்றே இந்த படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை கொண்டிருக்கிறது. இதில் ஆன்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.

இளையராஜா இசையமைத்துள்ள மனுசி படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.