என் மலர்
நீங்கள் தேடியது "வடக்கு ஆப்கானிஸ்தான்"
- விபத்துக்கு மினிபஸ் ஓட்டுனரின் கவனக் குறைவே காரணம் என குற்றச்சாட்டு.
- ஆப்கானிஸ்தானில் மோசமான சாலைகள் மற்றும் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் அடிக்கடி விபத்து.
வடக்கு ஆப்கானிஸ்தானில் மினி பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மக்கள் மினி பஸ்ஸில் சயாத் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.
சார்-இ-புல் மாகாணத்தில் தரமற்ற சாலைகள் கொண்ட மலைப் பகுதியில் மினி பஸ் சென்றுக் கொண்டிருந்தபோது பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து உள்ளூர் காவல்துறைத் தளபதியின் செய்தித் தொடர்பாளர் தின் முகமது நசாரி, விபத்துக்கு மினிபஸ் ஓட்டுனரின் கவனக் குறைவே காரணம் என குற்றம் சாட்டினார்.
ஆப்கானிஸ்தானில் மோசமான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் அடிக்கடி போக்குவரத்து விபத்துக்கள் நடப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.
- ஆப்கானிஸ்தானில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான பருவ மழை பெய்து வருகிறது.
- வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலுமாக சேதம்.
ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஏற்கனவே நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், நாட்டின் வடக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான பருவ மழை பெய்து வருகிறது.
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபர்யாப் மாகாணத்தில் நேற்று பெய்த கனமழையால் அங்குள்ள மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலுமாக சேதமடைந்ததாக மாகாண தகவல் இயக்குனர் ஷம்சுதீன் முகமதி கூறினார்.
இதேபோல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு மாகாணமான கோரில், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர்.