என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுரங்கம் தோண்டும் பணி"
- சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் 2ம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.
- வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு கடைகள் ஆகிய இடங்களையும் கடந்து வந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழத்தடம் 3ல் பாலாறு என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் பாலாறு என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை நிலையத்தை வந்தடைந்தது
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் இரண்டாம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.
வழித்தடம் 3-ல், சேத்பட் முதல் ஸ்டெர்லிங் சாலை வரையிலான சுரங்கப்பாதை பணிகள் செப்டம்பர் 2023-ல் சிறுவாணி மற்றும் பாலாறு என்ற இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மூலம் தொடங்கப்பட்டன.
ஒவ்வொரு சுரங்கப்பாதையின் நீளமும் 708 மீட்டர் ஆகும். சுரங்கம் தோண்டும் இயந்திரம் சிறுவாணி ஆகஸ்ட் 2024-இல் (downline) ஸ்டெர்லிங் சாலையை வெற்றிகரமாக வந்தடைந்தது.
இதற்கிடையில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் பாலாறு 2024 ஜனவரியில் (upline) சேத்பட் நிலையத்திலிருந்து சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு இன்று 09.10.2024 ஸ்டெர்லிங் சாலையை வந்தடைந்தது.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் பாலாறு பூமிக்கு அடியில் களிமண், மணல் மற்றும் பாறை பிரிவுகளையும், மேலும், சேத்பட் மாநகராட்சி பள்ளி, சேத்பட் தோபி காட், கருகாத்தம்மன் கோயில் மற்றும் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு கடைகள் ஆகிய இடங்களையும் கடந்து வந்துள்ளது.
இருப்பினும், பல குடியிருப்பாளர்கள் தங்கள் கட்டமைப்புகளின் கீழ் நடைபெறும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் செயல்பாடுகளை அறியாமலே இருந்தனர், இது வேலையின் துல்லியத்தை எடுத்துக்காட்டுகிறது.
குறிப்பாக சுரங்கப்பாதைக்கு மேலே 6 மீட்டர் களிமண்ணுடன் 52 மீட்டர் நீளமுள்ள கூவம் ஆற்றின் அடியில் கடந்தது சவாலாக இருந்தது. இந்த நுட்பமான செயல்பாடு குறைபாடற்ற முறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.
மேலும், இந்த சுரங்கப்பாதை பணிகளை முடிக்க 260 நாட்கள் ஆனது, இது சென்னை மெட்ரோ ரெயிலின் கட்டம்-2 பணிகளின் தற்போதைய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது.
இந்நிகழ்வை, சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர் சகாய் மீனா, இ.ஆ.ப., சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் கோனேரு பவானி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பூமிக்கு அடியில் 40 மீட்டர் ஆழத்துக்குள் நடந்த இந்த பணியில் சுமார் 1000 பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
- சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட ஆனைமலை எந்திரம் அடுத்ததாக அயனாவரம் பகுதியில் சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்பட உள்ளது.
சென்னை:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் 116.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 43 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் அமைகிறது.
அதிலும் மாதவரம்-சிப்காட் தடத்தில் 26.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் முதல் சுரங்கம் தோண்டும் பணியை கடந்த அக்டோபர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாதவரத்தில் இருந்து வேணுகோபால் நகர் வரை 415 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணியை 'ஆனைமலை' என்று பெயரிடப்பட்ட எந்திரம் தொடங்கியது.
பூமிக்கு அடியில் 40 மீட்டர் ஆழத்துக்குள் நடந்த இந்த பணியில் சுமார் 1000 பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
கடந்த 4 மாதங்களாக பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டப்பட்டது. 415 மீட்டர் தூரத்தையும் சுரங்கம் தோண்டிவிட்டு வேணு கோபால் நகரில் பூமியை துளைத்துக் கொண்டு வெளியே வந்த ஆனைமலை எந்திரத்தை அதிகாரிகளும், ஊழியர்களும் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது பலூன்களையும் பறக்க விட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இந்த வழித்தடத்தில் 2 பாதைகள் வேண்டுமென்பதால் கடந்த 5-ந் தேதி பால்பண்ணையில் இருந்து மற்றொரு சுரங்கம் தோண்டும் பணியை சேர்வராயன் என்ற எந்திரம் தொடங்கியது.
இந்த எந்திரம் பணியை முடித்துவிட்டு வருகிற ஆகஸ்ட் மாதம் வேணுகோபால் நகரில் வெளியே வரும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
சுரங்கம் தோண்டும் பணியில் 23 எந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும், தற்போது 6 எந்திரங்கள் மட்டுமே சுரங்கம் தோண்டி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
2-ம் கட்ட மெட்ரோ வழித்தடத்தில் உயர்மட்ட ரெயில் பாதைக்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு (2024) முடிந்துவிடும். 2025-ம் ஆண்டில் இருந்து படிப்படியாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும். 2027-ம் ஆண்டுக்குள் உயர்மட்ட பாதைக்கான பணிகள் முழுவதுமாக முடிந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட ஆனைமலை எந்திரம் அடுத்ததாக அயனாவரம் பகுதியில் சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்பட உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்