search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தாராம்மன் கோவில்"

    • வியாபாரிகள் தோனிகளில் சரக்குகளை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருவது வழக்கம்.
    • வேதனையுற்ற செட்டியாரும், அவர் மனைவியும், சிவனை வேண்டினார்கள்.

    முன்பொரு காலத்தில் வியாபாரிகள் தோனிகளில் சரக்குகளை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருவது வழக்கம். ஒரு செட்டியார் தன் மனைவியுடன் குலசேகர பட்டின கடற்கரையில் சென்றபோது கடல் அலையால் அவருடைய சரக்குகள் கடலில் மூழ்கியது.

    வேதனையுற்ற செட்டியாரும், அவர் மனைவியும், சிவனை வேண்டினார்கள். சிவனும் அவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். "ஆண்டவனே எங்களுக்கு காட்சி தந்ததே நாங்கள் செய்த பாக்யம், நீங்கள் (சிவனும் பார்வதியும்) இருவரும், திருமண கோலத்தில் இதே போல் பக்தர்களுக்கு காட்சி தர வேண்டுகிறேன் என்று வேண்டினார். இறைவனும் "அவ்வாறே ஆகட்டும்" என்று கோயில் பீடத்தில் காட்சி தருகிறார்.

    • பாண்டிய மன்னன் முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றினாள்.
    • அம்மனுக்கு கோபம் வரும் சமயம் ஊரில் உள்ள மக்களுக்கு முத்து வாரி போடுவது தட்டத்தி அம்மனின் வழக்கம்.

    குலசேகர பாண்டிய மன்னன், சுற்றியுள்ள சிற்றரசர்களிடம் போரிட்டு வெற்றிபெற்று தம் ஆதிக்கத்தை மதுரை முழுவதும் பரப்பினார். இதன் விளைவாக கேரளா நாட்டை கைப்பற்ற எண்ணி திருவனந்தபுர மன்னனிடம் தோல்வியுற்றான். வரும் வழியில் இரவு வெகு நேரமானதால் தூங்கிவிட்டான் பாண்டிய மன்னன். அவன்முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றினாள்.

    "பாண்டிய மன்னா தூங்கிவிடாதே, தூங்கி உன் நாட்டின் பெருமை இழந்து விடாதே ஒருமுறை தோற்றால் என்ன? மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசிர்வதித்து மறைந்தாள். மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அம்மனுக்கு கோயில் கட்டினான். கோவில் அருகே ஊர் அமைந்ததால் மன்னனின் நினைவாக குலசேகர பட்டினம் என பெயர் பெற்றது.

    முத்தாரம்மனின் ஆதி பெயர் தட்டத்தி அம்மனாகும். அம்மனுக்கு கோபம் வரும் சமயம் ஊரில் உள்ள மக்களுக்கு முத்து வாரி போடுவது தட்டத்தி அம்மனின் வழக்கம். அவ்வாறு முத்துவாரி போடுவதால் அம்மனுக்கு முத்தாரம்மன் என்று பெயர் மாற்றப்பட்டது.

    ×