என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அல்லிராஜா சுபாஸ்கரன்"
- லைகா குழுமத்தின் நிறுவனரும், தலைவரும் லைகா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமாக இருப்பவர் அல்லிராஜா சுபாஸ்கரன்.
- சுபாஸ்கரன் 26 தமிழ் அரசியல் கைதிகளுக்கு உதவித்தொகை வழங்கியுள்ளார்.
26 இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 லட்சம் உதவித்தொகை வழங்கியுள்ளார் லைகா குழும தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமாகிய சுபாஸ்கரன் .
லைகா குழுமத்தின் நிறுவனரும், தலைவரும் லைகா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா ரூ. 25 லட்சத்தை விடுதலை செய்யப்பட்ட 26 தமிழ் அரசியல் கைதிகளுக்கு சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் லைகா குழும உப தலைவர் பிரேம் சிவசாமி மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்புகளை மேற்கொண்டு விடாமுயற்சியுடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அல்லிராஜா சுபாஸ்கரன் வழிவகை செய்துள்ளார். பல்லாண்டுகாலமாக சிறையில் வாடிய கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் தலா ரூ. 25 லட்சத்தை தனது தாயார் திருமதி ஞானாம்பிகையின் பெயரில் இயங்கி வரும் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் மொத்தம் ஆறரை கோடி ரூபாய்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.