search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் வர்மா"

    • தமன்னா நடித்த அரண்மனை-4 படம் பெரிய வெற்றியை பெற்று ரூ.100 கோடி வசூலையும் குவித்தது.
    • லஸ்ட் ஸ்டோரீஸ்-2 படத்தின் விருந்தில் தமன்னாவிடம் காதலை கேட்டேன்.

    தமிழ், இந்தி, தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா நடித்த அரண்மனை-4 படம் பெரிய வெற்றியை பெற்று ரூ.100 கோடி வசூலையும் குவித்தது.

    தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ்-2 என்ற வெப் தொடரில் நடித்த போது சக நடிகரான விஜய்வர்மாவுடன் காதல் உருவானது. இந்த தொடரில் படுக்கையறை காட்சிகளில் இருவரும் நெருக்கமாக நடித்திருந்தனர்.


    தொடர்ந்து தமன்னாவும், விஜய் வர்மாகவும் பல்வேறு இடங்களில் டேட்டிங் செய்து வந்த நிலையில் கடந்த மாதம் தங்கள் காதலை உறுதி செய்தனர். தமன்னாவுடனான காதல் பற்றி விஜய் வர்மா கூறியதாவது:-


    காமக்கதைகளுக்கு பிறகு எங்கள் உறவு தொடங்கியது. முதலில் நாங்கள் சக நடிகராக சந்தித்தோம். லஸ்ட் ஸ்டோரீஸ்-2 படத்தின் விருந்தில் தமன்னாவிடம் காதலை கேட்டேன். 2005-ம் ஆண்டு நான் ஐதராபாத்தில் இருந்து வெளியேறி மும்பை வந்தேன். தமன்னா மும்பையில் இருந்து ஐதராபாத் வந்தார். ஐதராபாத்தில் நிலை நிறுத்திய மும்பை பெண். நான் ஐதராபாத் பையன். தமன்னா தமிழ், தெலுங்கு சரளமாக பேசுகிறார் என்றார். திருமணம் குறித்து தமன்னா கூறும்போது, "திருமணம் ஒரு பெரிய பொறுப்பு. அது ஒரு விருந்து அல்ல" என கூறினார்.

    • நடிகை தமன்னா, பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.
    • இவர் சமீபத்தில் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி செய்தார்.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ், ரஜினி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்ததையடுத்து சமீபத்தில் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி செய்தார்.


    இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது அவருக்கு திருமணம் நடைபெறபோவதில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், " திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ள தான் போகிறேன். ஆனால், இப்போது அதற்கான மனநிலை இல்லை.


    என் கேரியர் இப்போது சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். படப்பிடிப்புதான் இப்போது என் மகிழ்வான இடம்" என்றார் பேசினார்.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா.
    • இவர் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' விரைவில் வெளியாகவுள்ளது.


    தமன்னா

    நடிகை தமன்னா பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமீப காலமாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது இதை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "லஸ்ட் ஸ்டோரிஸ் 2-வில் தான் நாங்கள் பழகினோம். விஜய் வர்மாவிடம் என்னால் இயல்பாக பழக முடிந்தது. இவர் தான் நான் எதிர்பார்த்த நபர்.


    தமன்னா -விஜய் வர்மா

    நான் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வைத்துள்ளேன். பொதுவாக ஒரு பெண் அவரது வாழ்க்கை துணைக்காக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். எனது உலகத்தை புரிந்து கொண்ட ஒருவர் எனக்கு கிடைத்துள்ளார். அவரை நான் காதலிக்கிறேன். விஜய் வர்மா எனது மகிழ்ச்சியான இடம்" என்று பேசினார்.

    ×