என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிராஜ்"

    • படத்தின் முதல் ஸ்னீக் பீக் காட்சி அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • படத்தின் இசையை கே.எஸ். சுந்தரமூர்த்தி மேற்கொண்டுள்ளார்.

    சிபி சத்யராஜ் தற்போது டென் ஹவர்ஸ் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஓர் இரவில் அதை கண்டுபிடிக்கும் கதாநாயகன்.

    திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் முதல் ஸ்னீக் பீக் காட்சி அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் காட்சியை இயக்குநர் மாரி செல்வராஜ் இன்று வெளியிட்டுள்ளார். படத்தின் இசையை கே.எஸ். சுந்தரமூர்த்தி மேற்கொண்டுள்ளார்.

    ஒளிப்பதிவு- ஜெய் கார்த்திக் செய்துள்ளார். டுவின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜாக்சன் துரை 2’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜாக்சன் துரை'. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் இணைந்து நடித்தனர். மேலும், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காமெடி பேய் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். மேலும், சரத் ரவி, மணிஷா ஐயர், பாலாஜி, ரசிகா, யுவராஜ் கணேசன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    1940-ல் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றின் கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜாக்சன் துரை 2' திரைப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக பிரிட்டிஷ் கால செட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிபிராஜ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


    • இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜாக்சன் துரை 2’.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜாக்சன் துரை'. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் இணைந்து நடித்திருந்தனர். மேலும், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காமெடி பேய் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.



    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். மேலும், சரத் ரவி, மணிஷா ஐயர், பாலாஜி, ரசிகா, யுவராஜ் கணேசன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.



    1940-ல் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றின் கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்நிலையில், 'ஜாக்சன் துரை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சத்யராஜ் மாஸாக கண்ணாடி அணிந்திருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    ×