search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலச்சினை"

    • லெட்டா் பேடில் புதிய இலச்சினையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனா்.
    • மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகளுக்கான சான்றிதழ்களிலும் அதையே பயன்படுத்த வேண்டும்.

    மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இலச்சினை (லோகோ) புதிதாக மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி, அந்த புதிய இலச்சினையை மருத்துவக் கல்லூரி முதல்வா்களின் ஆவணங்கள், மருத்துவக் கல்வி சான்றிதழ்களில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவத்தைக் குறிக்கும் குறியீட்டுடன் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் என்ற வாக்கியமும், 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற வாசகமும் அந்த இலச்சினையில் இடம் பெற்றுள்ளது.

    இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநா் சாந்திமலா், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், துணை இயக்குநா்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களும், தங்களது லெட்டா் பேடில் புதிய இலச்சினையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். அதேபோல், மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகளுக்கான சான்றிதழ்களிலும் அதையே பயன்படுத்த வேண்டும். தொடா் மருத்துவக் கல்வி நிகழ்வுகள், துறைசாா் பிற நிகழ்வுகளிலும் புதிய இலச்சினையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×