search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்ப்யூட்டர் விலை"

    • இந்தியாவில் பயன்படுத்தப்படும் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்தே வருகின்றன.
    • கடந்த 2021-2022ம் நிதியாண்டில் ரூ.16,400 ஆக இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடந்த நிதியாண்டில் ரூ.11,500 ஆக குறைந்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் செல்போன்கள், டி.வி.க்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் கடந்த 2 ஆண்டுகளாகவே விலை உயர்ந்து காணப்படுகின்றன.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக விலை அதிகரித்தது.

    தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. மேலும் சீனாவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கண்டெய்னரில் கொண்டு வருவதற்கான சரக்கு கட்டணம் தற்போது குறைந்துள்ளது. இது ஏற்கனவே கொரோனா தொற்று பரவலின்போது ரூ.6.55 லட்சம் ஆக இருந்தது. இது தற்போது ரூ.69 ஆயிரம் முதல் ரூ.81 ஆயிரம் ஆக குறைந்துள்ளது.

    மேலும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான உதிரி பாகங்களின் விலையும் 60 முதல் 80 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் செல்போன், டி.வி., கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை குறைகிறது.

    இதுதொடர்பாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    இந்தியாவில் பயன்படுத்தப்படும் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்தே வருகின்றன. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான உதிரி பாகங்கள் விலை குறைந்திருப்பதாலும், சீனாவில் இருந்து பொருட்களை கொண்டு வரும் கண்டெய்னர் கட்டணம் குறைந்திருப்பதாலும் இந்த ஆண்டு பண்டிகை காலங்களில் செல்போன், டி.வி., கம்ப்யூட்டர் விலை குறையும். இதன் மூலம் இந்த பொருட்களின் விற்பனை அதிகரிக்கும்.

    கடந்த 2021-2022ம் நிதியாண்டில் ரூ.16,400 ஆக இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடந்த நிதியாண்டில் ரூ.11,500 ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இது மேலும் குறையும். குறிப்பாக தீபாவளி பண்டிகை முதல் விலை நன்றாக குறையும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×