என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆனி உத்திரதிருவிழா"
- அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரம் நடத்தப்பட்டது.
- தேரோட்டம் திங்கட்கிழமை நடைபெறுகிறது.
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் நாராயண சுவாமி கோவில் 94-வது ஆண்டு ஆனி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான நேற்று பரிவேட்டை விழா நடந்தது.
இதையொட்டி மாலையில் அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பரிவாரங்கள் புடைசூழ ஊருக்கு மேற்கே உள்ள காலங்கரை ஆற்றில் இறங்கி மேளதாளங்கள் முழங்க பரிவேட்டையாடினார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
- 7-ந்தேதி பரிவேட்டை நடக்கிறது.
- 10-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணி விடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து மூலஸ்தானத்தில் இருந்து பக்தர்கள் கொடி பட்டத்தை எடுத்து வந்து, கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க, சங்கு நாதம் இசைக்க கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
விழாவில் களக்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். விழாவின் 8-ம் நாளான வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பால் கிணற்றின் அருகே பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ம் நாளான வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- ஆனித் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
- 25-ந்தேதி பத்தாம் திருவிழா நடைபெற உள்ளது.
ஆறுமுகநேரியில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனை ஒட்டி இன்று காலை சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடைபெற்று கொடிப்பட்டம் வீதி உலாவும், அதனை தொடர்ந்து கும்ப பூஜை, ஹோமம் ஆகியவை நடைபெறுகிறது தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது. ஆனித் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
வரும் 25-ந்தேதி பத்தாம் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி மற்றும் இரவு ஆன்மீக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், பக்தி பட்டிமன்றம், சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், தேவாரம் நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்