search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநாடு பயணம்"

    • லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர்.
    • சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் உள்ள Durham பல்கலைக்கழகத்தில் ஒருவார பயிற்சி முடித்துவிட்டு சென்னை திரும்பிய மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இந்த சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவுத்திட்டம் மட்டுமல்ல; நான் விரும்பும் மாணவச் செல்வங்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்!

    இந்தத் திட்டத்தின்கீழ் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று பயிற்சி முடித்து திரும்பிய 25 மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, அவர்களது கண்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியையும் உள்ளங்களில் நிறைந்திருந்த நம்பிக்கையையும் கண்டேன். அவர்களது நம்பிக்கைதான் நாளைய நம் புகழுக்கான அச்சாணி!

    நாடும் நாமும் பெருமையடையக் கற்போம்!

    கல்வியைவிடச் சிறந்த செல்வம் ஏதுமில்லை எனக் கற்பிப்போம்!

    கல்வியே பெருந்துணை எனத் தடைகளை உடைத்து வெற்றிநடை போடுவோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இன்று மாலை ஸ்பெயின் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன்.
    • தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஸ்பெயின் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்!

    ஸ்பெயின் நாட்டிற்கான இந்திய தூதர் தினேஷ் கே. பட்நாயக், தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார்.

    இன்று மாலை ஸ்பெயின் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன்.

    தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பயணத்தின் போது பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள், அரசு பிரதிநிகளை சந்திக்கிறார்.
    • 10 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு அடுத்த மாதம் 7-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

    சென்னை:

    சென்னையில் கடந்த 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம் மேற்கொள்கிறார்.

    அதன்படி, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று இரவு புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு செல்கிறார். அங்கிருந்து ஸ்வீடன் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள், அரசு பிரதிநிகளை சந்திக்கிறார்.

    10 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு அடுத்த மாதம் 7-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

    • தொழிலதிபர்களுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.
    • முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் 10 நாட்கள் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

    இந்நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    வெளிநாட்டு பயணத்தின் போது பல்வேறு தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தொழிலதிபர்களுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.

    முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் 10 நாட்கள் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிப்ரவரி 5-ம் தேதிக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    • கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் செய்ய தொடங்குகிறோம்.
    • குப்பை தொட்டி இல்லாத நகரத்தையும் நாங்கள் விரும்புகிறோம்.

    சென்னை:

    சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா ஒரு வார பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்.

    மேயர் பிரியா இன்று இரவு ஸ்பெயின் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து பிரான்சுக்கு சென்று பின்னர் இத்தாலிக்கு செல்கிறார். மேயருடன் துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் உடன் செல்கிறார்கள். ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 24-ந் தேதி அவர்கள் சென்னை திரும்புகிறார்கள்.

    ஸ்பெயின், பிரான்ஸ் இத்தாலி ஆகிய நாடுகளில் கடைபிடித்து வரும் திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக மேயர் பிரியா அங்கு செல்கிறார்.

    சுற்றுச்சூழல் தீர்வுக்கு உலகத்தின் முன்னணியில் உள்ள உலகளாவிய நிறுவனம் அர்பேசர் ஆகும். அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்பெயினில் உள்ளது. நாங்கள் முதலில் அதை பார்வையிடுவோம்.

    கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் செய்ய தொடங்குகிறோம். அதை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். 2-வதாக குப்பை தொட்டி இல்லாத நகரத்தையும் நாங்கள் விரும்புகிறோம். எனவே ஐரோப்பிய நாடுகள் அதை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.

    சென்னை நகரில் கழிவு மேலாண்மை தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. எனவே குப்பை சேகரிப்பு மற்றும் செயலாக்க சேவைகளை மேம்படுத்தவும், கண்காணிக்கவும் இந்த பயணம் உதவும்.

    இவ்வாறு மேயர் பிரியா கூறியுள்ளார்.

    ×