என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்குவாஷ் போட்டி"
- கேலோ இந்தியா 2023 தமிழகத்தில் நடைபெற உள்ளது.
- சென்னையில் நடைபெற்ற உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
சென்னை நுங்கம்பாத்தில் இன்று மாலை சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. தனியார் ஓட்டலில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். ஸ்குவாஷ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.
அப்போது, ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியில் முதல் இடம் பிடித்த எகிப்து அணியினருக்கு சாம்பியன் பட்டத்தையும், ரூ.82 லட்சம் பரிசுத் தொகையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரில் 3ம் இடம் பிடித்த ஜப்பான் மற்றும் இந்திய அணியினருக்கு வெண்கலப் பதக்கத்தை வழங்கினார்.
இந்நிலையில், ஸ்குவாஷ் போட்டியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அரசில் உதவியுடன் உலக ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடைபெற்று உள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் சாம்பியனாக மாற்றி வருகிறார்.
சர்வதேச குழுவில் உள்ள 4 பேரில் மூன்று பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
கேலோ இந்தியா 2023 தமிழகத்தில் நடைபெற உள்ளது.
சென்னையில் நடைபெற்ற உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
இவ்வாறு அவர் கூறினார்.