என் மலர்
நீங்கள் தேடியது "வாலிபர் இளம்பெண்"
- புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சென்றது தெரியவந்தது.
- தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார்.
புதுச்சேரி:
புதுவை-கடலூர் சாலையில் அதிகாலையில் வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் பைக்கில் நெருங்கியவாறு உட்கார்ந்து சென்றனர். பைக்கில் சென்ற அவர்கள் மற்ற வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றனர்.
பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தபடியும் சில்மிஷத்தில் ஈடுபட்டவாறும் வாலிபர் பைக் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது மணவெளி ரோடு சந்திப்பில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பைக்கில் வாலிபரும், இளம்பெண்ணும் சில்மிஷத்தில் ஈடுபட்டவாறு ஜாலியாக வருவதை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலிபர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவர் அவரது தோழி என்பதும் தெரியவந்தது.
அவர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சென்றது தெரியவந்தது.
அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தார். போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அவர் அவ்வழியே வந்த வாகனங்கள் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.
இதையடுத்து போலீசார் வாலிபரையும், அவரது தோழியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார்.
இதில் காயமடைந்த வாலிபரை போலீசார் அழைத்து சென்று அரியாங்குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.