என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்யாணி பிரியதர்ஷன்"

    • கல்யாணி பிரியதர்ஷன் தற்போது ஜோஷி இயக்கத்தில் ஆண்டனி என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பில் கல்யாணி பிரியதர்ஷனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    பிரபல இயக்குனர் பிரியதர்ஷன்–நடிகை லிஸி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், தமிழில் 'ஹீரோ' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் 'புத்தம் புது காலை' வெப் தொடர் மற்றும் சிம்புவின் 'மாநாடு' படத்திலும் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.




    தற்போது கல்யாணி பிரியதர்ஷன், 'ஆண்டனி' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ஜோஷி இயக்குகிறார். இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத், விஜயராகவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றில் கல்யாணி பிரியதர்ஷன் டூப் போடாமல் நடித்துள்ளார். அப்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. 

    • வினீத் ஸ்ரீனிவாசன் அடுத்த படைப்பாக ”வருஷங்களுக்கு சேஷம்” என்ற படத்தை இயக்கியுள்ளார்
    • தியான், அஜூ வர்கீஸ், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    'மலர்வாடி ஆர்ட்ஸ் க்லப்' என்ற மலையாள படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் வினீத் ஸ்ரீனிவாசன். 2012 ஆம் ஆண்டு வெளியான தட்டத்தின் மறையத்து படத்தை இயக்கினார்.

    இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. மக்களிடம் வினீத் ஸ்ரீனிவாசன் பிரபலம் அடைய தொடங்கினார்.

    இவர் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முன்னணி கதாப்பாத்திரமாக நடித்து ஹ்ருதயம் படம் 2022 ஆம் ஆண்டு வெளியானது. மக்களிடையே மிகவும் வரவேற்கப்பட்டது. இளைஞர்கள் மத்தியில் ஹ்ருதயம் படம் கொண்டாடப்பட்ட இப்படம் தமிழக மக்களாலும் ரசிக்கபட்டது.

    அடுத்ததாக வினீத் ஸ்ரீனிவாசன் அடுத்த படைப்பாக "வருஷங்களுக்கு சேஷம்" என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெயிலர் நேற்று வெளியானது.

    ஹ்ருதயம் வெற்றிக்கு பிறகு பிரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்துள்ளனர். அவர்களுடன் தியான், அஜூ வர்கீஸ், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    80 களில் படம் நடப்பதாக காண்பிக்கபடுகிறது. இரு நண்பர்கள் பிரணவ் மற்றும் தியானும் மிகப்பெரிய நடிகர்கள் ஆக வேண்டும் என்ற கனவோடு கேரளாவிலிருந்து சென்னை கோடம்பாக்கம் வருகின்றனர். வந்த இடத்தில் அவர்களுக்கு சினிமா துறையின் உண்மை முகம் தெரிய வருகிறது, மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதில் தியான் பிரணவினால் நம்பிக்கை துரோகம் செய்யப்படுகிறான்.

    இவர்கள் திரைதுறையில் சாதித்தார்களா என்பதே கதை. டிரெயிலர் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. படத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் டிரெயிலர் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    விசாக் சுப்பிரமணியனின் மெரிலேண்ட் சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். அமிரித் ராம்நாத் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழில் ‘சிறைச்சாலை’, ‘லேசா லேசா’ உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
    • கல்யாணி ப்ரியதர்ஷன் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    தெலுங்கில் 2017-ல் வெளிவந்த 'ஹலோ' திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் கல்யாணி பிரியதர்ஷன். இவரது பெற்றோர் இந்திய திரைப்பட தயாரிப்பாளரான பிரியதர்சன்- மலையாள நடிகை லிஸ்சி ஆவர். கல்யாணி பிரியதர்ஷன் தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் 'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் 'ஹீரோ' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இவர் இயக்குனரும் கூட. தமிழில் 'சிறைச்சாலை', 'லேசா லேசா' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

    இவர் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய இரண்டு விருதுகளை தான் நடித்த முதல் படமான 'ஹலோ' படத்திற்காக பெற்றுள்ளார்.

    குறிப்பாக, இவர் ஹ்ர்தயம் மற்றும் மாநாடு படங்களில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்டார். இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

    இந்த நிலையில் சின்னத்திரை நடிகரை கல்யாணி ப்ரியதர்ஷன் ரகசியமாக திருமணத்தை செய்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ வைரலானது. இதனிடையே அந்த சின்னத்திரை நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாகவும், இது இரண்டாவது திருமணம் என்று கூறப்பட்டது. இதனால் கல்யாணி ப்ரியதர்ஷன் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இதனிடையே, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ ஒரு விளம்பரத்திற்காக படமாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. ஒரு நகைக்கடையின் விளம்பரத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகும் மாநாடு படத்தில் அரசியல்வாதி கதபாத்திரத்தில் இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் நடிப்பதாக வெளியான தகவலை வெங்கட் பிரபு மறுத்துள்ளார்.
    `சென்னை 600028' இரண்டாம் பாகத்திற்கு பிறகு வெங்கட் பிரபு `பார்ட்டி' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

    இந்த நிலையில், வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு `மாநாடு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், முக்கிய கதபாத்திரத்தில் அர்ஜூனும் நடிக்கிறார்கள்.



    அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இதில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கட் பிரபுவின் அப்பாவும், இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்த தகவலில் உண்மையில்லை என்று வெங்கட் பிரபு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் எஸ்.கே.15 படத்திற்கு இசையமைக்கும் பணியை யுவன் சங்கர் ராஜா தொடங்கியிருக்கிறார். #SK15 #Sivakarthikeyan #Yuvan
    `மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இது அவரின் 15-வது படம் என்பதால், எஸ்.கே.15 என்று தற்போது அழைத்து வருகிறார்கள். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், இவானா ஒப்பந்தமாகியிருக்கிறார். 



    தற்போது இப்படத்தின் இசையமைக்கும் பணிகளை தொடங்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இதை தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.

    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran #KalyaniPriyadharsan #Ivana #Yuvan
    தமிழ் சினிமாவில் கமல், சரத்குமார், அர்ஜுன் ஆகியோரின் மகள்களை தொடர்ந்து, பல நடிகர்களின் மகள்கள் அறிமுகமாக இருக்கிறார்கள். #Kamal #Sarathkumar
    சினிமாவில் அறிமுகமாக வாரிசு என்ற பின்புலம் உதவியாக இருக்கும். ஒரு நடிகரின் மகன் வாரிசாக அறிமுகமானால் அந்த நடிகரை மனதில் வைத்து வாரிசு நடிகரிடமும் எதிர்பார்ப்பு ஏற்படும். மகனை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பும் சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் தங்கள் மகள்களை வாரிசுகளாக அறிமுகப்படுத்தவோ படங்களில் நடிக்க வைக்கவோ யோசிப்பார்கள்.

    தற்போது அந்த நிலை மாறிவருகிறது. தமிழ் சினிமாவை வாரிசு நடிகைகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். கமல்ஹாசனின் மகள்கள் சுருதி ஹாசன், அக்‌‌ஷரா ஹாசன், ராதா மகள்களான கார்த்திகா, துளசி, சரத்குமார் மகள் வரலட்சுமி, அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, ரவிசந்திரனின் பேத்தி தான்யா, மேனகா சுரேஷ் மகள் கீர்த்தி சுரேஷ் என கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான வாரிசு நடிகைகள் அறிமுகமாகியுள்ளனர்.



    தற்போது இந்த வரிசையில் இயக்குனர் பிரியதர்‌ஷனின் மகள் கல்யாணி பிரியதர்‌ஷன், நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தியும் இணைந்துள்ளனர். கல்யாணி பிரியதர்‌ஷன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மித்ரன் இயக்கும் படத்தில் அறிமுகமாகிறார். கீர்த்தி அருண் பாண்டியன் புதுமுகம் தர்‌ஷனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதை உறுதி செய்த வித்யா பாலன், தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். #Thala59 #PinkRemake #VidyaBalan
    விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் வித்யா பாலன் எப்போதும் கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இந்தி சினிமாவில் உண்டு.

    முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டுமே அவர் தேர்வு செய்வார். ரீமேக் படங்களில் நடிக்கக் கூடாது என்பதையும் வழக்கமாகவே வைத்திருந்தார். மூன்றாம் பிறை படம் இந்தியில் சத்மா என்ற பெயரில் 1983-ம் ஆண்டு உருவானது. அந்தப் படத்தை மீண்டும் இந்தியில் ரீமேக் செய்வதற்காக ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க வித்யா பாலனிடம் பேசப்பட்டது. ஆனால் அந்தப் படத்தை ரீமேக் செய்து அதன் தரத்தை குறைத்துவிடக் கூடாது என அதில் நடிக்க மறுத்தார்.



    தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கில் தான் எவ்வாறு நடிக்கச் சம்மதித்தேன் என்பதை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். “இந்தப் படத்தில் நான் சிறிய வேடத்தில் நடிக்கிறேன். போனி கபூர் தயாரிக்கிறார். அவர்தான் சிறப்பு தோற்றம் தான் நீங்கள் இதில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். நான் உங்களுக்காக நடிக்கச் சம்மதிக்கிறேன் என்றேன். எனக்குப் படங்களை ரீமேக் செய்வது பிடிக்காது. முழுக்க முழுக்க போனி கபூருக்காகவே நடிக்கிறேன்” என்று வித்யா பாலன் கூறியுள்ளார். #Thala59 #AjithKumar #PinkRemake #VidyaBalan

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தில் நடிக்க இந்திய சினிமாவில் முக்கிய நடிகையும், தேசிய விருது வென்றவருமான வித்யாபாலன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Thala59 #AjithKumar
    `விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    இந்த படத்தில் 3 கதாநாயகிகளில் ஒரு கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மற்ற இரு கதாபாத்திரங்களுக்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கல்யாணி பிரியதர்‌ஷனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    மேலும் தேசிய விருது வென்ற நடிகை வித்யா பாலனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ் பதிப்புக்கு ஏற்ப எச்.வினோத் திரைக்கதையை மாற்றி அமைத்திருப்பதால், வித்யா பாலனுக்கு முக்கிய வேடம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. #Thala59 #AjithKumar #HVinoth #VidyaBalan #Nazriya #ShraddhaSrinath #YuvanShankarRaja

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க பிரபல நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. #Thala59 #AjithKumar
    விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பின்னர் ரிச்சி, இவன் தந்திரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். கன்னட நடிகையான இவர் அந்த மொழியிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித் நடிக்கும் பிங்க் இந்தி படத்தின் ரீமேக் படத்தில் நடிக்க அவரிடம் பேசியுள்ளனர்.

    இதில் 3 கதாநாயகிகள். ஒரு வேடத்தில் நஸ்ரியா, மற்றொரு வேடத்தில் பிரியதர்‌ஷன் மகள் கல்யாணி நடிக்கிறார் என கூறப்படுகிறது. 3-வது கதாபாத்திரத்தில் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் பேசியுள்ளனர். அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில் 3 கதாநாயகிகள் இருந்தாலும் அஜித்துக்கு யாரும் ஜோடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



    எச்.வினோத் இயக்கும் இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். #Thala59 #AjithKumar #Nazriya #KalyaniPriyadharsan #ShraddhaSrinath

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் ‘தல 59’ படத்தில் தேசிய விருது வென்ற பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Thala59 #ThalaAjith #KalyaniPriyadarshan
    ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தல 59’ என்று குறிப்பிடப்படுகிறது.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.



    இந்தப் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. பிரபல இயக்குனர் பிரியதர்‌ஷன் மற்றும் முன்னாள் நடிகை லிசி இருவரது மகள்தான் கல்யாணி. மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. ‘ஹலோ’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கல்யாணி, தற்போது மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், துல்கர் சல்மான் ஜோடியாக ‘வான்’ என்ற தமிழ்ப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். #Thala59 #AjithKumar #ThalaAjith #KalyaniPriyadarshan

    ×