என் மலர்
நீங்கள் தேடியது "மகேஷ்பாபு"
- நடிகர் மகேஷ்பாபு தற்போது ‘குண்டுர் காரம்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தை இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு தற்போது 'குண்டுர் காரம்' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'ஆலா வைகுந்தபுரமுலோ' படத்தை இயக்கிய த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'குண்டுர் காரம்' திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படத்திலிருந்து நடிகை பூஜா ஹெக்டே விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பூஜா ஹெக்டேவிற்கு போதிய கால்சீட் இல்லாததால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் 'வாத்தி' பட நடிகை சம்யுக்தா இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பூஜா ஹெக்டே- சம்யுக்தா
சமீபத்தில் 'குண்டுர் காரம்' திரைப்படத்தில் இருந்து தமன் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
- தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
- முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து ரூ.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மகேஷ் பாபு வழங்கினார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்திற்கும் ரூ.50 லட்சம் ரூபாயை வெள்ள பாதிப்பு நிவாரணமாக நடிகர் மகேஷ்பாபு வழங்கினார்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து ரூ.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவர் வழங்கினார்.
மேலும், AMB சினிமாஸ் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கப்பட்டது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.